வாய்மொழி வரலாறு: வடிவங்கள்
ஒலி மற்றும் ஒளி
வாய்மொழி வரலாற்றை ஒலி அல்லது ஒளி வடிவங்களில் பதிவு செய்யலாம். சேமிப்புத் திறன் (storage capacity), கோப்பின் அளவு (file size) பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். மேலும் முக்கியமாக, நீண்டகால பேணிப் பாதுகாத்தலுக்கான திறன் கொண்ட கோப்பு வடிவத்தில் (file format) இருத்தல் அவசியம்.
எழுத்துரு:
வாய்மொழி வரலாற்றை எழுத்துரு வடிவிவாக படியெடுத்தல் (trascription) அல்லது விவரக்குறிப்புப் பதிவாக (log) மாற்றலாம். இந்த படியெடுத்தல் ஒரு நூலகம் அல்லது ஆவணகத்தில் வாய்மொழி வரலாற்று ஆவணங்களை கண்டுபிடிக்க உதவும் கருவிகளின் (finding aids) நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
நேர்காணப்பட்ட நபரே தனது தனிப்பட்ட நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதலாம், ஆனால் இது வாய்மொழி வரலாறு என்ற வகைப்படாது.
கையால் எழுதப்பட்ட தனிப்பட்ட நினைவுகள் வெவ்வேறு வழிகளில் ஆவணப்படுத்தலாம்:
- கையால் எழுதப்பட்ட தாள்கள் இயற்பியல் (physical) களஞ்சியங்களில் ஒரு இயற்பியல் ஆவணமாக (physical archive) ஆவணப்படுத்தலாம்.
- கையால் எழுதப்பட்ட தாள்கள் மின் வருடப்பட்டு (scan) எண்ணிமமயமாக்கலாம் (digitalisation). எண்ணிமக் கோப்பை எண்ணிமக் களஞ்சியத்தில் ஆவணப்படுத்தலாம்.
மின் வருடப்பட்டு பின்னர் எண்ணிமமயமாக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கணினி தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகளை PDF / A கோப்பு வடிவமாக மாற்றம் செய்ய வேண்டும். இந்த வடிவம் பலவிதமான PDF வடிவங்களில் ஒன்று ஆகும். இது நீண்ட கால ஆவணப்படுத்தலிற்கான சர்வெதேசத் தரத்திலான ஒரு வடிவம் ஆகும் (International standardised format). ஆனால் நம்பகத்தன்மை (authentication) மற்றும் உறுதிப்படுத்தல் (verification) காரணங்களிற்காக இயற்பியல் ஆவணங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது முக்கியம்.
7 thoughts on “வாய்மொழி வரலாறு”