வாய்மொழி வரலாறு: நிறுவனங்கள்
Aavanaham.org
நூலக நிறுவனம் ஒரு தமிழ் எண்ணிம சமூக ஆவணகம் (களஞ்சியம்) (community archive) ஆகும். இது “நூலக திட்டம்” எனும் பெயரில் இரண்டு தமிழ் தன்னார்வலர்களால் ஈழத்தில் (இலங்கை) 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இது விரைவில், கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு மனப்பாண்மை மக்களின் கூட்டுப் பங்களிப்பினால் நூலக நிறுவனமாக பரிணமித்தது. இது நன்கொடைகளால் நிர்வகிக்கப்படுகிறது. Aavanaham.org 2017ம் ஆண்டு நூலக நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது. இது அனைத்து வகையான ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சேகரித்து, பிரிவுகள் மற்றும் குறியீடுகள் கொடுக்கப்பட்டு (categories and index), சேமித்து, பேணிப் பாதுகாத்து, பொது மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
நூலாக நிறுவனம் ஒரு வாய்மொழி வரலாறு பகுதியை ஆவணகதில் (aavanaham.org) கொண்டுள்ளது. அது “வாய்மொழி வரலாற்று ஆராய்ச்சி நிலையம்” என்ற செயற்திட்டப் பெயரில் ஈழத்தில் வாழும் மக்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கி, சேகரித்து வருகின்றது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள ஏனைய தமிழர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளையும் சேகரித்து வருகின்றது. தமிழ் வாய்மொழி வரலாற்றை பதிவு செய்து, சேகரித்து சேமித்து, பேணிப் பாதுகாத்து, பொதுமக்கள் அணுக்கத்திற்கு கிடைக்கச் செய்த களஞ்சியங்களில் ஒன்று நூலக நிறுவனம் ஆகும். இதுவரை அறியப்பட்டதின் அடிப்படையில், ஈழத்தில் வாய்மொழி வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கும் முதல் களஞ்சியமாக நூலக நிறுவனம் அறியப்படுகின்றது.
Minner.no
Minner.no பல்வேறு வகையான நேர்காணல்கள் மற்றும் எழுதப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்க, பேணிப் பாதுகாக்க மற்றும் பரவலாக்க ஒரு எண்ணிமச் சூழலை உருவாக்குகின்றது. இங்கு பேணிப் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் பல்வேரு நபர்களின் அறிவையும் அனுபவங்களையும் எடுத்துரைகின்றது. Minner.no இன் கூற்றுப்படி, இக்கருவி வளர்ச்சியில் உள்ளது. மேலும் Minner.no சிறந்த ஏற்பாடுகளை எளிதாக்குவதற்கு நீண்ட கால முன்னோக்குடன் செயற்படுகின்றது:
- தனிப்பட்ட நபர்கள் தங்களது சொந்த அனுபவங்களை கடத்தவும் – மற்றவர்களின் அனுபவங்களில் பங்கேற்கவும்
- பண்பாட்டு நிறுவனங்கள் சமூகத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்து சேகரிக்க பொதுமக்களிற்கு அழைப்பு விடுக்கவும்
- பல்வேறுபட்ட மக்கள் தங்களது சொந்த வாழ்க்கையையும் வாழ்க்கை நிலைமைகளையும் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் (audience), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்கவும்
Memoar – வாய்மொழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history)
Memoar ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது நோர்வேயில் வாய்மொழி வரலாற்றுக்கான வள மையத்தை உருவாக்குகின்றது. அவர்கள் ஏனைய நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சமகாலத்தைப் பற்றிய வாய்மொழிப் பதிவுகளை உருவாக்க, சேகரிக்க, பேணிப் பாதுகாக்க, மற்றும் பரவலாக்க செயற்படுகின்றது. அவர்களின் நோக்கமானது “வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வாய்மொழி கதைகளைப் பேணிப் பாதுகாக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டை ஊக்குவிப்பதாகும்” ( “å fremja ein kultur for å ta vare på og dela munnlege forteljiongar om levd liv” / “to promote a culture of preserving and sharing oral narratives about lived life”).
2020ம் ஆண்டின் அன்றாட வாழ்க்கைகளை தற்போது Memoar ஆவணப்படுத்துகின்றது. இது கொரோனாச் சூழலை மையமாகக் கொண்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு: http://www.memoar.no/korona.
தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் Zoom அல்லது பிற தொலைத்தொடர்வு தளங்கள் மூலம் நேர்காணல் செய்து உரையாடலைப் பதிவு செய்கிறார்கள்.
Memoar இன் ஒரு பரவலான அழைப்பு
DsporA Tamil Archive Memoar ஐத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தமது ஆர்வத்தைக் காட்டினர். ஆர்வமுள்ள தமிழ் நபர்கள், நிறுவனங்கள் அல்லது பிற சமூகங்களுக்கு கடந்த கால மற்றும் நிகழ்கால வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்து சேகரிப்பதற்கான செயல்முறைப் பயிற்சி வகுப்புகளை வழங்குவது குறித்த தகவலை ஒரு பரவலான அழைப்பாக விடுத்தனர். இன்நேரத்தில் Memoar “அனைவரின் வாய்மொழி வரலாறு” எனும் செயற்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறுகின்றது. இதனால் பங்கேற்பாளர்களுக்கு எந்த செலவும் இல்லை. ஆனால் பங்கேற்பாளர்கள் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதற்கான இட வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.
7 thoughts on “வாய்மொழி வரலாறு”