வாய்மொழி வரலாறு: தோற்றம்
ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவு ஒரு வரலாற்றின் புனரமைப்பு (reconstruction) அல்லது மறு விளக்கக்காட்சிப் (representation) பதிவாகும். இருப்பினும், எதிர்காலத்தில் இதனைப் பதிவு செய்த நிறுவனத்தின் ஆவணமாகும். அந்தப் பதிவு ஒரு நம்பகத்தன்மையான ஆவணமாக இருக்க வேண்டும். அதற்கு அதன் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். தனியுரிமைக் கொள்கையின் (Privacy) அடிப்படையில், வாய்மொழி வரலாற்றுப் பதிவின் உரிமை வாய்மொழி கூறியவரிடமே இருக்கும். ஆனால் ஆவண முன்னோக்கின் அடிப்படையில், வாய்மொழி வரலாற்றுப் பதிவின் தோற்றம் அதனை உருவாக்கிய அமைப்பிடமே இருக்கும். இது உரிமையைப் பற்றியது அல்ல, மாறாக தோற்றம் பற்றியது. உதாரணமாக, X எனும் அமைப்பு ஒரு நபரின் அல்லது ஒரு தமிழ் அமைப்பின் வரலாற்றைச் சொல்லும் வாய்மொழி வரலாற்றுப் பதிவை உருவாக்கினால், அந்த வாய்மொழி வரலாற்றுப் பதிவின் தோற்றம் X எனும் அமைப்பு ஆகும்.
7 thoughts on “வாய்மொழி வரலாறு”