வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு: அனுகூலங்கள், பிரதிகூலங்கள்
அனுகூலங்கள்:
  • வாய்மொழி வரலாறு அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கும் மற்றும் ஆவணமற்ற வரலாறுகளை காப்பாற்றுவதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.
  • தங்களால் எழுத முடியாத நபர்களுக்கும், வேறு வழிகளில் ஆவணப்படுத்தப்படாத கதைகளுக்கும் குரல் கொடுக்கும் ஒரு வழிமுறை ஆகும்.
  • வாய்மொழி வரலாற்றில் தங்கள் சொந்த கதைகளைச் சொல்லும் நபர்கள் கூறப்படும் தலைப்பு அல்லது கருப்பொருளைப் பற்றி தங்களது முன்னோக்குகளையும் கூறுவார்கள்.
  • ஒரு ஒலி அல்லது ஒளி வடிவிலான வரலாற்றில் சம்பந்தப்பட்ட நபர் கூறும் வரலாறு, 50 மற்றும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த குறிப்பிட்ட காலம், நேரத்தைப் பற்றி இயன்ற அளவு நெருக்கமான தொடபையும் பிரதிநிதித்துவத்தையும் (contact and representaion) அளிக்கும்.
  • ஒலி அல்லது ஒளி வடிவிலான வரலாறு எழுத்துரு வடிவ வரலாறுகள் கொடுக்காத மற்றொரு பரிமாணத்தை தரும்.
  • ஒரு 50 ஆண்டுகால வரலாற்றை எழுதுவதை விட, பல தசாப்த கால வரலாற்றை ஒலி அல்லது ஒளி வடிவில் பதிவுகளாக செய்வது நேர மிச்சப்படுத்தலாக இருக்கும்.
  • கடந்த காலத்தை பதிவு செய்து அக்காலத்தில் இருந்த தலைப்பு, நபர், பொருள், காலச் சூழல் போன்றவற்றின் ஓர் கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ள ஒரு பயனுள்ள வழிமுறை ஆகும்.
  • வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று வழி ஆகும்.
பிரதிகூலங்கள்:
  • நேர்காணப்படும் நபர் அவரது நினைவகத்தை இழக்கக்கூடும்.
  • விவரங்களின் துல்லியம் பலவீனமடையக்கூடும்.
  • நேர்காணப்படும் நபர் அவர்கள் உண்மையாக அடைந்த அடைவுகளை விட அவர்கள் அடைய விரும்பியதைக் கூறக்கூடும்.
  • சிலர் நேர்மறையான சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். பின்னடைவுகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
  • வாய்மொழி வரலாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சேகரிப்பை உருவாக்கக்கூடும்.

வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை பயன்படுத்துபவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள நேரம், சம்பவம், செயல், பரிவர்த்தனை பற்றிய விவரங்களை சரிபார்க்க/ உறுதிப் படுத்த பிற ஆவணங்களைத் தேட வேண்டி இருக்கும். ஆதார மூல விமர்சனம் (source criticism) வாய்மொழி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் ஒரு ஆராய்ச்சி அல்லது ஊடகத் தயாரிப்புகளிற்கு ஒரு இயற்கையான படிமுறைச் செயற்பாடாக இருக்கும். ஒருவர் ஆதார மூல விமர்சனத்தைச் (source criticism or information evaluation) செய்யும்போது இப்பிரதிகூலங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். இருப்பினும், வாய்மொழி வரலாற்றுச் செயற்பாட்டை ஊக்க இழப்புச் செய்யக்கூடாது (demotivate). ஏனெனில் வாய்மொழி வரலாற்றில் பிரதிகூலங்களை விட அனுகூலங்களே அதிகமாக உள்ளன.

7 thoughts on “வாய்மொழி வரலாறு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s