வாய்மொழி வரலாறு: உரிமை
வாய்மொழி வரலாறு நேர்காணல் செய்யப்பட்ட நபரும் நேர்காணலை பதிவு செய்யும் நிறுவனமும் ஒரு வாய்மொழி வரலாற்று நேர்காணல் பதிவிற்கான உரிமையாளர்கள் ஆவர். நேர்காணல் செய்பவர் முதன்மை உரிமையாளர் அல்ல, ஆனால் இரண்டாம் நிலை உரிமையாளர். ஒளிப்பதிவுக் கலைஞருக்கும் இதே படிநிலை உரிமை ஆகும். நேர்காணல் செய்யப்படும் நபர் எந்த நேரத்திலும் நேர்காணல் ஒரு களஞ்சியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது அதன் பகுதிகள் பின் திகதிகளில் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கோரலாம். நேர்காணப்பட்ட நபர்கள் எந்த நேரத்திலும் தங்களது பங்களிப்பை ஒரு களஞ்சியத்தில் பேணிப் பாதுகாக்கப்படாமல் திரும்பப் பெறலாம். இருப்பினும், வாய்மொழி வரலாற்றைக் கூறும் நபருடன் இந்த உரிமை நிறுத்தப்படல் வேண்டும். உதாரணமாக, பேரக்குழந்தைகள் அல்லது சந்ததியினர் தங்களது முன்னோரின் பதிவை நீக்கக் கோர முடியாது. நேர்காணப்பட்ட நபர் காலமானதும், வாய்மொழி வரலாற்றுப் பதிவின் நிர்வாகப் பொறுப்பு அதனைப் பதிவு செய்யும் நிறுவனத்திடம் செல்லும். இந்த வகையான விவரக்குறிப்புகள் அனைத்தும் நேர்காணப்படும் நபர் அவரின் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க வேண்டும்.
நேர்காணல் கோப்பு ஒரு பொது அணுக்கத்திற்கு விடலாமா அல்லது ஆராய்ச்சிக்கான ஆவணமாக மட்டும் பயன்படுத்தலாமா என்ற முடிவு எடுக்க வேண்டியது முக்கிய கூறு ஆகும்.
ஆவணப்படுத்தல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இருந்தால், இன்னும் சில காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இதற்காக விரிவான தனியுரிமை ஒப்புதல் பணிகளைச் செய்ய வேண்டும். ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பதியப்பட்டு பேணிப் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் பற்றிய மேலதிகத் தகவலுக்கு:
https://www.etikkom.no/hvem-er-vi-og-hva-gjor-vi/Hvem- is-we / The-national-research-ethics-committee-for-social-sciences-and-humanities /
மற்றும்
https://nsd.no/personvernombud/.
7 thoughts on “வாய்மொழி வரலாறு”