வாய்மொழி வரலாறு

வாய்மொழி வரலாறு: தனியுரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம்

ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டத்தின் அடிப்படையில் தனி மனித உரிமை (privacy) மற்றும் கருத்துச் சுதந்திரம் (freedom of speech) குறித்துக் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல்கள் இருக்கும். நோர்வேயில் தனியுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில்:

தனியுரிமை

நோர்வே தனியுரிமைக் கொள்கையின் அடிப்படியில் ஒரு நபரைப் பற்றிய எழுத்துரு, ஒலி மற்றும் ஒளி தனிப்பட்ட தகவல்களாகக் (personal information) கருதப்படுகின்றன. எனவே, ஒப்புதல் படிவங்கள் முக்கியமானவை! நேர்காணல் செய்யப்படும் நபர் தன்னை நேர்காணல் செய்ய (ஒலி / ஒளி / எழுத்துரு) ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவை ஒரு களஞ்சியத்தில் சட்ட ரீதியாகப் பேணிப் பாதுகாக்க முடியும். ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவை இரு வேறு கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுத்தலாம்.

  1. ஒரு நேர்காணலை ஆராய்ச்சிப் பொருளாகப் பேணிப் பாதுகாக்க முடியும். அதாவது, ஒரு பதிவை ஆராய்ச்சிக்கு மட்டுமே அணுக முடியும். (மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் – restricted access) 
  2. ஒரு நேர்காணலை பொதுமக்களுக்கு பகிரங்கமாகக் கிடைக்கச் செய்யலாம். (திறந்த அணுக்கம் – open access)

ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிடுவதன் மூலம் நேர்காணப்படும் நபர் அனுமதி வழங்க வேண்டும். ஒரு நேர்காணல் கோப்பு எவ்வாறு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அந்த ஒப்புதல் படிவம் மூலம் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அந்த நபர் ஒரு நேர்காணலின் ஒலி/ ஒளிப் பதிவின் முதல் பகுதியில் தனது வாய்மொழி ஒப்புதலை அளிக்க வேண்டும். நூலகத்தின் கூற்றுப்படி, ஒரு பதிவின் தொடக்கத்தில் வாய்மொழி ஒப்புதல் பெறுவதற்கான அதே நடைமுறை உள்ளது.

Memoar இன் ஒப்புதல் படிவம்:
www.memoar.no/avtale

பேச்சுச் சுதந்திரம்

நேர்காணல் செய்யப்படுபவர்கள் தங்களுக்கு விருப்பமான விடயங்களைப் பற்றி சுதந்திரமாக பேசலாம். ஆனால் கொடுக்கப்பட்ட கருப்பொருளிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும், நேர்காணலை வெளியிடுமாறு அவர்கள் கோர முடியாது. இந்த விடயத்தில், பத்திரிகை நெறிமுறையை (press ethics) பின்பற்றுவது அவசியம். இச்சந்தர்ப்பங்களில் வாய்மொழி வரலாற்றை ஆவணப்படுத்தும் நிறுவனம் உள்ளடக்கத்திற்கான ஆசிரியர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட வேண்டும். மூன்றாம் தரப்பினருக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் என்றால், உள்ளடக்கத்தை வெளியிடக் கூடாது. உதாரணமாக, நேர்காணலில் குறிப்பிடப்படும் வேறு நபர்கள் தமது ஒப்புதலைத் தராவிட்டால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் வெளியிடக் கூடாது. ஒரு நேர்காணல் கோப்பில் இவ்வாறான பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக் கோப்பு உருவாக்க (publish version) வேண்டும். ஆனால் அப்பகுதிகள் அதல் அசல் கோப்பில் (origianl version) பேணிப் பாதுகாக்கப்பட்டு, ஆராய்ச்சிக்கு மட்டும் கிடைக்கச் செய்யலாம்.

7 thoughts on “வாய்மொழி வரலாறு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s