ஆவணம் என்பது ஒரு அறிவு (knowledge) மற்றும் தகவலுக்கான (information) முதன்மை ஆதார மூலம் ஆகும். “Archive” எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. “Archive” என்பதற்கான நோர்வேயியச் சொல் “arkiv” ஆகும். இச்சொல் பின்வரும் அர்த்தங்களைக் குறிக்கும்:
- ஆவணப் பொருள் / ஆவணம்
- ஒரு நிறுவனத்தில் உள்ள ஆவணப் பிரிவு அல்லது ஆவணச் சேவை
- ஆவணப் பொருட்களை/ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு இடம்/ அறை
- ஆவணக்காப்பு நிறுவனம்/ ஆவணகம்/ ஆவணக்காப்பகம்
“Archival document” என்பதற்கான தமிழ் சொல் “ஆவணம்” ஆகும். ஆனால் “ஆவணம்” என்ற தமிழ் சொல் குறித்து தமிழர்களிடையே குழப்பம் நிலவுவதைக் காணலாம். “ஆவணம்” என்ற சொல்லை தமிழர்கள் வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்துகின்றனர். அவை குழப்பங்களையும் மற்றும் தவறான புரிதலையும் உருவாக்கலாம். இன்னும் ஒரு முக்கிய விடயமாக ஏறக்குறைய அனைத்து தமிழ் அமைப்புகளும் “ஒரு நிறுவனத்தில் உள்ள ஆவணப் பிரிவு அல்லது ஆவணச் சேவை” முழுமையான இயங்கு நிலையின்றி இயங்குவதைக் காணலாம்.
தமிழர் ஆவணம் என்ற சொல்லை தொட்டு உணரக்கூடிய மற்றும் மெய்நிகர் பத்திரங்களையும் கோப்புகளையும் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். இதை ஆவணப் பொருட்கள் என்றும் அழைக்கலாம். இன்னும் ஒரு சொல் “ஆவணப்படுத்துதல்” (documentation). இந்த சொல் ஒரு செயல் / நிகழ்வு / செயல்முறையை ஆவணப்படுத்தும் (documentation) செயல்பாட்டைக் குறிக்கிறது. ஆனால் இச்சொல்லை தமிழர்கள் கடந்த கால நிகழ்வுகளை அல்லது வரலாற்று நிகழ்வுகளை மீள் பதிவு செய்தல் அல்லது மீளச் சொல்லுதல் (re-tell) என்பது குறிக்கப் பயன்படுத்தும் சூழலைக் காணலாம். கால நிகழ்வுகளை அல்லது வரலாற்று நிகழ்வுகளை எழுத்துரு, ஒளி, ஒலி, வரைகலை அல்லது பிற வடிவங்களில் அப்பதிவுகள் இருக்கக் காணலாம். இது வரலாற்று நிகழ்வுகளை புனரமைப்பு (reconstruction) அல்லது மறு விளக்கக்காட்சி (representation) அகும். வரலாற்று நிகழ்வுகளை மீளச் சொல்வது, புனரமைப்பது அல்லது மீண்டும் வழங்குவதன் மூலம் உருவாகும் ஆவணம் ஒரு புதிய பதிவாகும் (new record). ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டின் விளைவாகும் இந்தப் புதிய பதிவு உருவாகும். எனவே இந்த ஆவணம் அந்த நிறுவனத்தின் வரலாற்று ஆவணமாக இருக்கும்.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வத் தொண்டு அமைப்பான PEARL இன் “Black July: A Tamil Genocide” என்ற வலைத்தளப் பக்கத்தின் ஒரு பகுதி இங்கு படமாக உள்ளது. இது அசல் ஆவணப் பொருள் (original archival material) மற்றும் PEARL என்ற நிறுவனத்தின் ஆவணம் (organisational archive) ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டை விளக்க ஒர் எடுத்துக்காட்டாக பயன்படுத்தபடுகின்றது.
இந்தப் படத்தில் “Disposal of dead bodies without inquiry: C.R.M. expresses alarm” என்ற தலைப்பில் வெளியான ஒரு செய்தித்தாள் கட்டுரை உள்ளது. இது “Saturday Review” என்ற செய்தித்தாளின் ஆவணம் ஆகும். PEARL அமைப்பு கறுப்பு யூலை 1983 பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்க இந்த ஆவணப் பொருளை அறிவு (knowledge) மற்றும் தகவலுக்கான (information) ஒரு ஆதார மூலமாக எடுத்துள்ளது. இந்த இணையவலைப் பக்கத்தின் உள்ளடக்கம் அசல் ஆவணப் பொருளின் அடிப்படையில் சமகால பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று மீள் வழங்கல் (re-presentation) ஆகும். இப்போது இந்த இணையவலைப் பக்கமான, “Black July: A Tamil Genocide”, PEARL இன் ஆவணப் பொருளாக அமையும்.
Saturday Review (11.06.1983) – PDF
மூல ஆவணப் பொருள்: «Saturday Review» (noolaham.net)
மேற்கோள்:
Saturday Review. (1983). Newspaper article Disposal of dead bodies without inquiry: C.R.M. expresses alarm by Saturday Review. Saturday Review (Noolaha id. 24766). Noolaham Foundation, http://noolaham.net/project/248/24766/24766.pdf.
PEARL. (n.a). “Black July: A Tamil Genocide”. From https://pearlaction.org/rememberingblackjuly/
உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது: 17.05.2021