“நுட்பம்” (NUDPAM – meaning “The technique”) எனும் ஆண்டு மலர் “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” எனும் ஓர் மாணவர் அமைப்பால் வெளியிடப்பட்டது. 1998 ஆம் அண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் புகைப்படங்களை யாழினி தேவ இரக்கம் DsporA Tamil Archive க்கு அனுப்பி வைத்தார். அவர் 1990-களின் துரண்யம் பல்கலைக்கழக மாணவராவார். மொத்தமாக ஒரு சில பதிப்புகள் வெளியிடப்பட்டன.
1980 களின் பிற்பகுதியில், துரண்யத்தில் சில தமிழ் மாணவர்களால் ஒரு தமிழ் ஒன்றுகூடல் குழு உருவாக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மறைந்த பேராசிரியர் துரைராஜா, ஓகஸ்ட் 1993 இல் துரண்யத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது ஆலோசனையின் அடிப்படையில் ஒன்றுகூடல் குழு “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” என்று உருவாக்கப்பட்டது.
இந்த மலர் இப்போது ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். இது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் துரண்யம்மில் மாணவர்களான கதையைக் கூறும் ஓர் சான்று. இந்த ஆவணம் 1989 க்கு முன்னும் மற்றும் பின்னும் தமிழ் மாணவர்களுடைய சமூக நிலையைக் கூறுகின்றது. 1989 க்கு முன்னர் வெளிநாட்டுப் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து நேரடியாக நோர்வேயிய பல்கலைக்கழக அனுமதியை விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களின் பல்கலைக்கழக அனுமதியின் அடிப்படையில் மாணவர் அயல்நாட்டு நுழைவுச்சான்று (student visa) பெற்று நோர்வேக்கு பயணம் செய்யலாம்.
தமிழ் எழுத்துக்களை கணினிமயமாக்குவது என்ற செயற்பாடு 1980 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது பற்றிய இன்னும் ஒரு வரலாற்றுக் குறிப்பின் சான்றாக இந்த ஆவணம் அமைகின்றது.
இந்த வகையான வெளியீடுகள் தனியார் வீடுகளில் பொக்கிசங்களாக உள்ளன. இந்த மலர், மற்றும் இதுபோன்ற பிற வெளியீடுகள், ஒரு நோர்வேயிய ஆவணகத்தில் ஆவணப்படுத்துவதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது. இவை நோர்வே-தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும். அவை சமூகத்தைப் பற்றிய பல்வேறு கதைகளைச் கூறும் சான்றுகள். இவ்வாறான ஆவணங்களுக்கு பொது அணுகல் வழங்கப்படும்போது, அவை உலகெங்கிலும் வாழும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் உத்வேகம் அளிக்கும் ஆவணங்களாகின்றன.
பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.
உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020
One thought on “நுட்பம்”