“தமிழி” என்பது 8 அத்தியாயங்களையும் ஒரு இசை ஒளிப்படத்தையும் கொண்டு வெளியான இணைய வலை ஆவணப்படத் தொடர். இது தமிழ்-பிராமி (தமிழி), இன்றைய தமிழ், சிந்து வழி நாகரீகம் மற்றும் சங்க காலம் போன்றவற்றைக் கூறும் ஓர் வரலாற்று ஆவணப்படம் ஆகும்.
இந்த இணைய வலைத் தொடர் ஆவணப் பொருட்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று ஆவணப்படத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த இணைய வலைத் தொடரில் உள்ள வரலாற்று உண்மைகளுக்கான ஆதார மூலங்கள் இவை. இந்த இணைய வலை ஒளி/ஒலித் தொடர் ஆவணப் பரப்புதலுக்கான ஒர் எடுத்துக்காட்டாகவும் அமைகின்றது. வலைத் தொடரின் இறுதித் தயாரிப்பு, ஹிப்ஹாப் தமிழா மற்றும் குழுவினரின் 2019 ஆம் ஆண்டின் தயாரிப்பின் ஆவணப் பொருளாக இன்று உள்ளது.
சிந்தனை மற்றும் இயக்கம்: பிரதீப் குமார் விவரணக் குரல்: ஹிப்ஹாப் தமிழா ஆராய்ச்சி மற்றும் எழுத்து:இளங்கோ ஒளிப்பதிவு: லோகேஷ் இளயா, பாலாஜி பாஸ்கரன் இசை: ஹிப்ஹாப் தமிழா படத்தொகுப்பு: வினோத், பிரதீப் குமார், ஸ்ரீஜித் சாரங், திலகேஷ் பிரதீஷ் தயாப்பு: ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பு ஆண்டு: 2019 தயாரிப்பு இடம்: தமிழ்நாடு, இந்தியா
உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.