நன்றியும் பாராட்டுகளும்: தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க ஆர்வம்

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 02. பெப்ரவரி 2021

02. பெப்ரவரி 2021அன்று ஆவணம் பற்றிய முதலாம் இணையவழிச் சந்திப்பை புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் நோர்வே வாழ் தமிழ் சமூகத்திற்காக ஒழுங்கு செய்தது. நோர்வேயில் ஆவணங்களைப் பேணும் ஆறு நிறுவனங்களைப் (ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம்) பிரதிநிதித்துவப்படுத்தி 4 தலைப்புகளில் உரைகள் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தொழிலாளர் இயக்கத்தின் ஆவணகம் மற்றும் நூலகம் (the archives and library of the labour movement/ Arbeiderbevegelsens Arkiv og Bibliotek – ArbArk), பேர்கன் நகர ஆவணகம் (City archive of Bergen / Bergen Byarkiv), ஒசுலோ நகர ஆவணகம் (City archive of Oslo / Oslo Byarkiv), ஆக்கஷ்கூஸ் அருங்காட்சியகங்கள் (The museums in Akershus / Museene i Akershus – MiA), நோர்வே தேசிய நூலகம் (National Library of Norway / Nasjonalbiblioteket) மற்றும் Memoar பங்களித்தன.

 • தொழிலாளர் இயக்கத்தின் ஆவணகம் மற்றும் நூலகத்திலிருந்து மார்ட்டின் எலிங்ஸ்ரூட் (Martin Ellingsrud) பதிவேடு மற்றும் பதிவேடு மேலாண்மை பற்றி பேசினார்.
 • பேர்கன் நகர ஆவணகத்திலிருந்து தர்யே ஹராம் (Terje Haram) வரலாற்று ஆவணங்களைப் பற்றி பேசினார்.
 • நோர்வே தேசிய நூலகத்திலிருந்து கெர்ஸ்டி ருஸ்டாட் (Kjersti Rustad) வெளியிடப்பட்ட ஆவணங்களைப் பற்றி பேசினார்.
 • Memoar இலிருந்து பியோர்ன் ஏனெஸ் (Bjørn Enes) வாய்மொழி வரலாறு பற்றி பேசினார்.

ஆறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த இணையவழிச் சந்திப்பில் கலந்து கொண்டனர். அவை தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழர் வள- மற்றும் ஆலோசனை மையம் (TRVS), தமிழ் பெண்கள் அமைப்பு (ஒசுலோ), தமிழ் பெண்கள் அமைப்பு (உல்ஸ்டைன்விக்), Radio Tamil Bergen / தேன் தமிழ் ஓசை மற்றும் நோர்வே தமிழர் மக்கள் அவை (NCET) ஆகும்.

1970 களில் இருந்து பேர்கன் மற்றும் ஒசுலோவில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் ஈடுபட்டிருந்த அல்லது ஈடுபட்டு வரும் 7 தமிழ் தனிநபர்களும் பங்கேற்றனர். உதாரணமாக, பேர்கன் தமிழ் சிறுவர் பாடசாலை மற்றும் ஈழத் தமிழர் சங்கம் (பேர்கன்), Aktive kvinner (சிறுபான்மை பின்புலத்தைக் கொண்ட பெண்களுக்கான உடல் பயிற்சி வழங்கும் அமைப்பு, ஒஸ்லோ) மற்றும் தமிழ் அரசியல் அமைப்பு.

தமிழ் சமூகத்தின் ஆர்வம்

இந்த இணையவழிச் சந்திப்பில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை கண்டு ஆவணங்களைப் பேணும் நிறுவனங்கள் ஆச்சரியப்பட்டனர். இது தமிழ் சமூகம் தம் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்க எவ்வளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதையே பிரதிபலிகின்றது. புலப்பெயர்வு, இடபெயர்வு, நிரந்தர அலுவலகம் இல்லாதமை, ஆவணம் பற்றிய போதிய புரிதல் இல்லாதமை, வளப் பற்றாக்குறை, பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் மனிதவளப் பற்றாக்குறை என்று பல்வேறு காரணிகளால் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் ஆவணங்கள் சிதறடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. இது போன்ற காரணிகள் இருப்பினும்கூட, கலந்து கொண்ட தமிழ் அமைப்புகளும் தனிநபர்களும் ஆவண செயல்பாடுகள் செய்வதை அறிந்து புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் ஊக்கமடைகின்றது. எதிர்கால சமூகத்தின் நலனுக்காக இந்த ஆவணச் செயல்பாடுகளை ஆதரிக்க, உதவ, வசதி செய்து கொடுக்க எமக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை தருகின்றது. எனவே சமூக ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயல்முறை இரு வழி தொடர்பாலும் கூட்டுறவும் (two way communication and cooperation) தேவைப்படும் ஒரு செயல்பாடு ஆகும்.

இந்தச் சந்திப்பு ஆவணத் துறை மற்றும் தமிழ் நிறுவன வாழ்க்கை முறை குறித்து ஆவணங்கள் பேணும் நிறுவனங்களுக்கும் தமிழ் நிறுவன சமூகத்திற்கும் பரஸ்பர மற்றும் இரு வழி கற்றலாக அமைந்தது. ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு ஆவணங்கள் பேணும் நிறுவனங்கள் (ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம்) தமிழ் அமைப்புகளை தம்முடன் தொடர்பு கொள்ள வரவேற்கின்றன. அதே போல் புலம்பெயர் (DsporA) தமிழ் ஆவணகம் தமிழில் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க மகிழ்வுடன் வரவேற்கின்றது. எந்தவொரு ஆவண நிறுவனத்தையும் தொடர்பு கொள்வதால் நீங்கம் உங்களது ஆவணங்களை அவர்களிடம் வழங்க வேண்டும் என்ற நிர்ப்பத்தமோ அல்லது கட்டாய கடமையோ அல்ல என்பதை வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

ஆவணங்களைப் பேணும் நிறுவனங்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன் வந்தனர். ஆக்கஷ்கூஸ் அருங்காட்சியகங்கள் தமிழ் சமூகத்தின் ஆவணப் பொருட்களைக் கண்காட்சியாக காட்சிப்படுத்தக்கூடிய வாய்ப்பைக் கூறினர். வாய்மொழி வரலாற்றை ஆவணப்படுத்துவதில் பயிற்சியும் பட்டறைகளும் வழங்கலாம் என்று Memoar கூறியது.

இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 09. பெப்ரவரி 2021

ஆவணம் பற்றிய அடுத்த இணையவழிச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை 09. பெப்ரவரி 2021 அன்று நோர்வே நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு 02.02.2021 அன்று நிகழ்ந்த கூட்டத்தின் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். இது நோர்வேயிய மொழியில் நிகழும். ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் பெப்ரவரி 09 ஆம் தேதி இணையவழிச் சந்திப்பு நடைபெறும். இந்த இணையவழிச் சந்திப்பிற்கு நோர்வேயிய தேசிய நூலகம் (Nasjonalbiblioteket) TEAMS தொழில்நுட்ப உதவியை செய்கின்றது. தேசிய நூலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம், அவர்கள் உங்களுக்கு ஒரு TEAMS இணைப்பை அனுப்புவார்கள்:

மிசேல் டிட்செல் (Michelle Tidsel)
michelle.tisdel@nb.no

உங்கள் மின்னஞ்சலில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:

 • அமைப்பு அல்லது நபரின் பெயர்
 • நோர்வேயில் உங்கள் இடம்
 • நாள் (செவ்வாய் 09.02.2021 (15-16: 30))
 • பங்கேற்பாளர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல்

தமிழில் ஒரு இணையவழிக் கலந்துரையாடல்/ சந்திப்பு

ஆவணம் / ஆவணப்படுத்தல் பற்றிய தகவல்கள் தமிழில் பெற்றுக் கொள்ள DsporA தமிழ் ஆவணகத்தை தொடர்பு கொள்ளுங்கள். தமிழில் ஒரு இணையவழிக் கலந்துரையாடல்/ சந்திப்பை ஏற்பாடு செய்ய திட்டமிடுகின்றோம்.

பகீரதி குமரேந்திரன்
dspora.tamilarchive@hotmail.com

உங்கள் மின்னஞ்சலில் பின்வரும் தகவல்களைச் சேர்க்கவும்:

 • அமைப்பு அல்லது நபரின் பெயர்
 • நாடு, இடம்
 • பங்கேற்பாளர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல்
 • ஆவணம்/ ஆவணப்படுத்தல் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

Utrop செய்தித்தாள் மேற்கொண்ட நேர்காணல்

நோர்வேயில் தமிழ் ஆவணங்கள் மற்றும் வரலாறு பற்றிய நேர்காணலை மேற்கொண்ட மிசேல் டிட்ஸலுக்கும் (Michelle Tidsel) ஊத்ரூப்- நோர்வேயின் முதல் பல்லின பண்பாட்டுச் செய்தித்தாளுக்கும் (Utrop – Norges første flerkultruelle avis / Utrop – Norway’s first multicultural newspaper) நன்றிகள்.

பகுதி 1:
https://www.utrop.no/plenum/ytringer/243778/
பகுதி 2:
https://www.utrop.no/plenum/ytringer/244730/

“தமிழ் சமூகத்தின் சமூக ஆவணங்களை உருவாக்கும் நிறுவன செயல்பாட்டை தமிழ் அமைப்புகள் கொண்டுள்ளன. அவர்களின் ஆவணங்கள் எதிர்காலத்திற்கான கடந்த காலம் பற்றிய சமூக ஆவணங்கள் ஆகும். ”

DsporA Tamil Archive

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 11.02.2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s