பாலா மற்றும் பாலு: இரண்டு ஆவணப்படுத்தல் தளங்கள்

antonbalasingham.com
பாலு மகேந்திரா நூலகம்

English

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு ஆவணப்படுத்தல் மற்றும் பரவலாக்கல் தளங்கள் அறிமுகமாகியுள்ளன.
ஒன்று antonbalasingham.com. அடுத்தது பாலு மகேந்திரா நூலகம். இவ்விரு தளங்களையும் DsporA இணையத்தளத்தில் பட்டியலிட்டுள்ளோம்.
https://dspora.no/archive-collection-of-tamils-tamil/
https://dspora.no/archive-library-museum-tamil/

படம்: antonbalasingham.com

antonbalasingham.com

இந்த இணையத்தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்கள் மற்றும் செவ்விகள் ஆகிய ஆவணங்களின் எண்ணிமப் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தளம் 14.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
www.antonbalasingham.com

படம்: பாலு மகேந்திரா நூலகம் முகநூல்

பாலு மகேந்திரா நூலகம்

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு. கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் இணையத்தளம் 27.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஈழம்.
www.balumahendralibrary.org
@balumahendralibrary.org

நீங்கள் அறிந்த வேறு தமிழ் ஆவணகம், நூலகம், அருங்காட்சியகம் அல்லது தமிழர் ஆவணச் சேகரிப்புகள் பற்றி எங்களுக்கு அறியப்படுத்துங்கள். பிஜி தீவுகள் முதல் கனடா வரை, நோர்வே முதல் தென் ஆபிரிக்கா வரை வாழ் உலகத் தமிழர்களின் ஆவணங்களை அறியத்தாருங்கள்.

“ஆவணங்கள் இருப்பிற்கான சான்றுகள்.”

DsporA Tamil Archive

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 28.12.2020