உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்

English

பரவலான அழைப்பு

நோர்வேயிய தேசிய நூலகத்தின் பேணிப் பாதுகாப்பு மற்றும் எண்ணிமமயமாக்கல் நடவடிக்கைகள்

இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் -19 காரணமாக, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் உரையாடல் இணையவழி உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் நோக்கம்:
ஆவணம் என்றால் என்ன, உங்கள் நிறுவன அமைப்பின் ஆவணங்கள் எந்த விதத்தில் உங்கள் நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது, மற்றும் உங்கள் அமைப்பு அதன் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எவ்வாறு ஆவணப்படுத்தலாம் என்பது பற்றிய பொதுவான அறிமுகம் மற்றும் தகவல்களைப் பெற அமைப்புகள் / நிறுவனங்கள் இதை ஒரு “உந்துதலாகப்” பயன்படுத்தலாம்.

உங்கள் பதிவுக்கு நன்றி! மேலதிக விபரம் விரைவில். (மூடப்பட்டுள்ளது)


மேலதிகம்:
இணையவழிச் சந்திப்பு: ஆவணம்

புதுப்பிக்கப்பட்டது: 04.01.2020

One thought on “உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்

Comments are closed.