08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

இன்று எமது ஒவ்வொரு செயற்பாடும் எதிர்காலத்தின் வரலாறாக அமையும். நமது உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி எழுதுவதற்கு ஒருவர் வரலாற்றாசிரியராகவோ அல்லது ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. உள்ளூர் வரலாறு சார்ந்த உங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் உங்களால் மட்டுமே எழுத முடியும்.
இப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) உள்ளூர் வரலாற்றை உருவாக்குவதற்கு நோர்வே வாழ் தமிழர்களை பங்காளராக வருமாறு அழைக்கின்றது.
நீங்கள் ஒரு விடயம், இடம், நபர், அமைப்பு, நிறுவனம் பற்றி பதிவிடலாம். அல்லது வேறு உள்ளூர் மற்றும் வரலாறு சார்ந்த எந்தவொரு கருப்பொருளைப் பற்றியும் எழுதலாம், புகைப்படத்தை பதிவிடலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் நோர்வேக்கு வந்தவுடன் எடுத்த முதல் புகைப்படத்தை பதிவேற்றலாம்?
தாயகத்தில் இருந்து இன்னும் நினைவாக உங்களுக்கு இருக்கும் பொருட்களைப் பற்றிய பதிவாக இருக்கலாம்?
தமிழ் இசை, பண்பாடு, மொழி, வரலாறு, புலம்பெயர்வு பற்றி இருக்கலாம்?
நோர்வேயிய பண்பாடான குடில் பயணத்தில் தமிழர் பற்றி இருக்கலாம்.
இரண்டாம் தலைமுறை தமிழர்களின் பார்வையில் நோர்வே-தமிழ் பதிவுகளாக இருக்கலாம்.
NLI இன் கடிதம் நோர்வேயிய மற்றும் தமிழ் மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவலுக்கு NLIயைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
தமிழில் மேலதிகத் தகவலுக்கு இங்கு தொடர்பு கொள்ளவும்.
நோர்வே-தமிழ் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த வாருங்கள்.
https://lokalhistoriewiki.no/wiki/Kategori:Tamiler
இங்கே இ. மயூரநாதன் தமிழில் விக்கி தொழில்நுட்பத்தைப் பற்றி சுருக்கமான விளக்கம் தருகின்றார் (02:31 – 15:07).
4 thoughts on “உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்”
Comments are closed.