நீங்கள் முதல் தலைமுறை தமிழரா? அல்லது நீங்கள் இளைய தலைமுறை தமிழரா?
அல்லது நீங்கள் தமிழரின் புலம்பெயர்வு வரலாற்றில் ஆர்வம் உள்ளவரா?
நீங்கள் நோர்வேயில் வசிக்கிறீர்களா?
அல்லது நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உங்கள் உதவி எமக்கு தேவை!
DiasporA Tamil Archives தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது. எங்கள் நோக்கத்தை அடைய, நோர்வேயிய-தமிழ் முன்முயற்சிகள் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய நோர்வே வாழ் ஏனையோரின் முன்முயற்சிகள்; அதோடு நோர்வேயில் உள்ள தமிழ் மற்றும் தமிழர்கள் பற்றிய அனைத்து முன்முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தை (overview) உருவாக்க விரும்புகிறது. கண்ணோட்டத்தை (overview) ஒரு பட்டியலாக வெளியிடுவோம், இது தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் வடிவமாகவும் இருக்கும்.
நோர்வேயிய-தமிழ் வரலாற்றைக் கைப்பற்றவும் (capture), பாதுகாக்கவும் (protect) மற்றும் பேணிப் பாதுகாக்கவும் (preserve) உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்:
- இணையம் மற்றும் சமூக ஊடக சகாப்தத்திற்கு முந்தைய முயற்சிகள்
- இணையம் மற்றும் சமூக ஊடக சகாப்தத்திற்குப் பிந்தைய முயற்சிகள்
முன்முயற்சிகள் (initiative) என்பது: தனிநபர் (individual), குழு (group), அமைப்பு (organisation), நிறுவனம் (business), தளம் (platform) போன்றவையைக் குறிக்கும்.
வேலைப்பணி:
1.உங்களால் முடிந்த அல்லது நீங்கள் அறிந்த முன்முயற்சிகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும்:
- முன்முயற்சியின் பெயர்
- முன்முயற்சி தொடங்கிய காலம்
- முன்முயற்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலம்
- எந்த இடத்தில் முன்னெடுக்கப்பட முன்முயற்சி
- முன்முயற்சிக்கான வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள்
- முன்முயற்சியின் நோக்கம்
2.இந்தப் பக்கத்திலிருந்து Excel வார்ப்புருவை தரவிறக்கம் செய்யவும். நீங்கள் சேகரித்த தகவலை நிரப்பவும்.
3.Excel கோப்பை எங்களுக்கு அனுப்பவும்: diasporatamil@hotmail.com.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக உங்கள் பெயரையும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு/ நிறுவனத்தையும் இறுதித் தயாரிப்பில் குறிப்பிடுவோம்.
உங்கள் உதவி இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பெறுமதிமிக்கதாக இருக்கும்.
இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்!
Excel வார்ப்புருக் கோப்பை தரவிறக்கம் செய்யவும்
உங்களுக்குத் தெரிந்த தமிழ் மற்றும் தமிழர் பற்றிய முன்முயற்சிகளை எமது மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்:
diasporatamil@hotmail.com
முதல் கட்ட முடிவுத் திகதி: 01.01.2022
உதாரணம்

வகை சுட்டெண் பட்டியல்
தேவைக்கேற்ப வேறு வகைகளையும் நீங்கள் சேர்க்கலாம்.

புதுப்பிக்கப்பட்டது│Updated: 19.08.2021