இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்

English

நளாயினி இந்திரன் (திருமணத்திற்கு முன் நளாயினி கணபதிப்பிள்ளை) 1991-1995 வரை இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1995 இல் திருமணம் செய்துகொண்டு இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தார்.

படம்: நளாயினி இந்திரன் (தனிநபர் ஆவணம், சுமார் 2016)

நளாயினி கணபதிப்பிள்ளை பெண்ணியம், ஆவணப்படுத்தல் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் சேவையாற்றிய போது எழுதிய மூன்று கட்டுரைகள் இங்கு வளங்குகின்றோம். இவர் தனது சேவைக் காலத்தில் ஆவணகத்தில் பணிபுரிந்த ஒரே தமிழர் ஆவார். நளாயினி தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்பு ஆவணகத்தில் மற்றொரு தமிழர் பணியாற்றினார் என்பது அறியப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நளாயினி கொழும்பில் உள்ள தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

படம்: நளாயினி கணபதிப்பிள்ளை (தனிநபர் ஆவணம், 1991-192?)

பதிவேடுகள் பேணப்படுவதன் அவசியம் என்ன?
நளாயினி கணபதிப்பிள்ளை பதிவுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எழுதிய ஒரு செய்தித்தாள் கட்டுரை. வீரகேசரி வார இதளில் (23-10-1992) வெளியிடப்பட்டது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இச்செய்தித்தாள் கட்டுரையை மின் வருடி (scan), 23-09-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். பகுதி 1/2.

பதிவேடுகள் பேணப்படுவதன் அவசியம் என்ன?
பகுதி 2/2.

சுவடிகளும் சுவடிகள் கூடத்தின் செயற்பாடுகளும்
1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுவடிகள் வாரத்தில் வெளியான நினைவுப் பிரசுரம் (Souvenir). இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்கழத்தால் வெளியானது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இதனை மின் வருடி 23-09-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.

குறிக்கோள்களை நிறைவேற்றும் நிர்வாகக் கருவி பதிவேடுகள்
நளாயினி கணபதிப்பிள்ளை (நளாயினி இந்திரன்) பதிவு செய்தல் பற்றி எழுதி வெளியான செய்தித்தாள் கட்டுரை. 12-12-1993 அன்று வீரகேசரி வார இதழில் வெளியிடப்பட்டது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இதனை மின் வருடி 02-10-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.


– சரவணன் கோமதி நடராசா (DsporA Tamil Archive முகநூல் பதிவுப் பின்னூட்டம், 15.10.2020)

தமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு – என்.சரவணன்


நன்றி

நளாயினி இந்திரன். (2020). வாய்மொழி வரலாறு. இலண்டன், ஐக்கிய இராச்சியம்.


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 04.01.2021

One thought on “இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்

Leave a comment