பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்

English

இன்றைய செயற்பாடுகளின் பதிவுகளே எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் ஆகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் பதியப்படும் தமிழ் நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

நோர்வேயியப் பொதுத் தளங்களில் மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடவடிக்கைளே பதியப்படுகின்றன. என்றாலும் அங்கு பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருப்பதால், பதிவுகள் தானியங்கியாக் கைப்பற்றப்பட்டு வரலாற்று ஆவணங்கள் பேணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, தனியார் தளங்களில் அதிகமான தமிழ் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. கவலைக்குரிய நிலையாக, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இல்லாததால், இந்த நடவடிக்கைகள் எந்தவொரு பதிவு அல்லது ஆவணத்திலிருந்தும் விடுபடுகின்றன. அதனால் எதிர்காலத்திற்கான ஆவணங்கள் இல்லாமல் போகின்றன.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள் இன்னும் ஓர் வரலாற்று மதிப்பு மிக்கச் செய்தியை வெளிப்படுத்துகின்றன. நோர்வேயியப் பொதுத் தளங்களில் புலம்பெயர்த் தமிழ்ப் பெண்களின் செயற்பாடுகளைக் கூறுகின்றது. இவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறைப் புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் ஆவர். இவர்கள் தமிழ்க் கலை, இசை, பண்பாடு மற்றும் வரலாற்றை நோர்வேயியப் பொது மக்களுக்கு தமது செயற்பாடுகள் மூலம் அறியப்படுத்தியுள்ளனர். இச்செயற்பாடுகள் புலம்பெயர் மண்ணில் பண்பாடுகளிற்கு இடையேயான தடைகளை நீக்கி, பாலங்களைக் கட்ட பங்களித்துள்ளது.

தமது நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தமிழ்ப் பெண்கள் பல்வேறு வகையான செயற்திட்டங்களில் பல்வேறு பாத்திரங்களை வகித்துள்ளனர். இந்த செயற்திட்டங்கள் மூலம் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்த அதே சமயம் நோர்வேயியப் பண்பாட்டை மதித்து ஒரு நோர்வே-தமிழ் கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிக்கும் பங்களித்துள்ளனர்.

இவர்கள் செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக, ஒரு முக்கிய பாத்திரமாக, ஒரு சக நடிகராக, மற்றவர்களை வளர்த்தெடுக்கும் ஒரு பயிற்சியாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பங்கு வகித்துள்ளனர். இதோடு சம நடவடிக்கையாக, இதில் சிலர், ஒரு தனியார் அமைப்பை நிறுவி, சமூகத்தின் கலை, பண்பாடு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றிற்காக செயற்படுகின்றனர். இந்தப் பெண்கள் தங்கள் முழுநேர வேலையுடனேயே இந்த நடவடிக்கைகளை செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள் பொதுத் தளங்களில் தமிழ் நடவடிக்கைகளிற்கான பதிவுக் கைப்பற்றல்களிற்கான எடுத்துக்காட்டுகள். அதே நேரத்தில், தனியார் தளங்களில் நிகழும் நடவடிக்கைகள் எதிர்காலத்திற்காகப் பேணிப் பாதுகாப்பதிலிருந்து தொலைந்து போகும் ஆவணங்களின் எடுத்துக்காட்டுகளும்கூட.

இதனால் தனியார் தளங்களில் தமிழர்களின் அதிகப்படியான செயற்பாடுகள், பொதுத் தளங்களில் செயற்படுவதைக் காட்டிலும் குறைவானதோ அல்லது முக்கியத்துவம் அற்றதோ என்ற அர்த்தம் அல்ல. உதாரணமாக, இந்த கொரோனா சூழ்நிலையில், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சமூக அமைப்புகளின் செயற்பாடுகளின் முக்கியத்துவம் புலப்படுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட நேரம், வளம் மற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்டு, தன்னார்வச் சேவையின் அடிப்படியில் இயங்கும் அமைப்புகளின் சேவை இன்றியமையாதது மற்றும் வரலாற்று மதிப்புமிக்கது.

எனவே, பதிவுகளைக் கைப்பற்றி ஆவணப்படுத்தும் ஓர் ஒழுங்கமைப்பு இருத்தல் மட்டுமே எதிர்காலத்திற்கான வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியக் கடத்தல் செயற்பாட்டில் பாரிய பேறுபாட்டை உருவாக்குகின்றது. ஒரு அமைப்பின் உள்ளக ஆவணங்கள் மட்டுமே அதனைச் சுற்றியுள்ள சமூகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணிப் பாதுகாக்க முடியும்.

“ஒரு அமைப்பின் ஆவணப் பொருட்களை சேகரிப்பது அவ்வமைப்பின் சமகால நிர்வாகக்குழுவில் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்னாள் மற்றும் சமகால உறுப்பினர்ககளினதும் பொறுப்பாகும். ஏனெனில் அந்த ஆவணப் பொருட்கள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும். இந்த நிலைமை நோர்வே தன்னார்வ அமைப்புகளுக்கும் பொதுவானது என்பது ஒரு ஆறுதலாக இருக்க இங்கு குறிப்பிடுகின்றேன். பொது அணுகல் மற்றும் பயன்பாடு இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இழந்த ஆவணங்களுக்குச் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்.”

தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி

Utrop (2010)

“கூத்து” ஒரு பாரம்பரிய தமிழ் நாடக வடிவம். இது 2010 ஆம் ஆண்டு, நோர்வேயில் உள்ள Oslo Opera House இல் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. Oslo Opera House இல் ஒரு தமிழ் நிகழ்ச்சி அரங்கேரியதும் இதுவே முதல் முறையாகும். “புவி வெப்பமடைதல்” பற்றிய நிகழ்ச்சியை ஈழத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள், Nordic Black Theater இன் மாணவர்கள் மற்றும் Oslo Music and Culture school இன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வழங்ககினார்கள். ஒஸ்லோவில் நடைபெற்ற ஒரு வார தமிழ் ஓபரா விழாவில் கூத்து ஒரு அங்கமாக இடம்பெற்றது.

Utrop இல் வெளியானதின் அடிப்படியில், நோர்வே மற்றும் இலங்கைக்கு இடையேயான இணைவாகம் மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதிலும், அதோடு இலங்கையில் சிங்கள மற்றும் தமிழர்களிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இன்நிகழ்வு செயல்பட்டது என்று இச்செயற்திட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான வாசுகி ஜெயபாலன் கூறுகினார்.

வாசுகி ஜெயபாலன் Oslo Fine Arts academy எனும் பெயரில் ஓர் கலைக்கூடத்தை நடாத்தி வருகின்றார்


TV2 தொலைக்காட்சியின் நடனப் போட்டியான “norske talenter” (நோர்வேயியத் திறமைகள்) இல் கலா சாதானா எனும் நடனக் கலைக்கூட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நோர்வே-தமிழ் யுவதிகள், நோர்வேயிய மற்றும் தமிழ் பண்பாட்டை இணைத்து «சமத்துவம்» குறித்த கலை நிகழ்வை வழங்கினர் . இதன் நடன நெறியாள்கை கவிதா லக்சுமி.

அதேபோல் ஏனைய தமிழ் சிறுவர் சிறுமிகள் ஒரு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியோ அல்லது தனி நபர்களாகவோ இந்தத் தொலைக்காட்சி போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

கீழே உள்ள படம் 2019 ஆம் ஆண்டு TV2 “norske talenter” இல் அரையிறுதிப் போட்டிக்கு வந்த அக்சயாவைக் காட்டுகின்றது. இன்நடனத்தின் நெறியாள்கை துஷ்யா அமரசிங்கம். அவர் நாட்டியவருணா எனும் நடனக் கலைக்கூடத்தை நிர்வகிக்கின்றார்.


சத்தியரூபி சிவகனேஷ் எழுதிய “Aktive Kvinner på tur – fra hele verden” கட்டுரை. இக் கட்டுரை “Leve Lillomarka” (2019) எனும் நூலில் வெளியானது. இது லில்லோமார்க்காவின் நண்பர்களது 50 வது ஆண்டு நிறைவிற்காக லில்லோமார்க்காவின் நண்பர்கள் வெளியிட்டார்கள். லில்லோமார்கா ஒஸ்லோவில் உள்ள வனத்தின் ஒரு பகுதியாகும். இது மத்திய ஒஸ்லோவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ளது. லில்லோமார்க்காவின் நண்பர்கள், லில்லோமார்க்காவைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும், கவனிக்கவும் செயற்படும் ஒரு சங்கம் ஆகும்.

சத்தியரூபி சிவகனேஷ், “Aktive kvinner” (சுறுசுறுப்பான பெண்கள்) என்னும் அமைப்பை நடாத்தி வருகின்றார். அவ்வமைப்பு ஒஸ்லோவில் உள்ள பியெர்க்கே (Bjerke) நகரப்பிரிவுடன் கூட்டிமுயற்சியில் ஒஸ்லோ வாழ் புலம்பெயர் பின்னணியைக் கொண்ட பெண்களுக்கு உடற்பயிற்சி அளித்து வருகின்றார்.

இதோடு அவர் ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள ஆலோசனை மையத்திலும், Noreel எனும் தமிழ் விளையாட்டுக் கழகத்திலும் ஏரோபிக் வகுப்புகள் வழங்கி வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு மூடப்பட்ட காலப்பகுதியில், அவர் மார்ச் முதல் யூன் வரை இணைய வழி ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளை வழங்கினார். அத்துடன் நோர்வேயிய காட்டில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயணங்களை ஒருங்கிணைத்தார். கோடை விடுமுறை நாட்களிலும் தொடர்ந்த நோர்வேயிய காட்டில் உடற்பயிற்சியானது இன்றுவரை தொடர்கின்றது. நாடு மூடப்பட்ட காலப்பகுதியில் ஒருங்கிணைத்த உடற்பயிற்சி செயற்பாடுகள் பல்லினப் பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்களை பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், விரைவில் ஆண்களும் பங்கேற்பாளர்களானார்கள்.


“Tyfonens Øye” (The typhoon’s eye)

Kjell Kristensen (ஷெல் கிறிஸ்டென்சன்) எழுதிய “ Tyfonens Øye ”(டைபூனின் கண்)
இயக்கம்: Cliff A. Mustache (கிளிஃப் எ. முஸ்தாஷ்)
5 ஆம் தேதி ஏப்ரல் மாதம் 2011 ஆம் ஆண்டு Cafeteatret இல் அரங்கேற்றப்பட்டது.

«”Typhoons Øye” இல், ஒரு தமிழ் கிராமத் தலைவரும், பணியில் இருந்து விலகிய ஒரு சிங்கள வீரரும் ஒரு விசித்திரமான பொதுவான விதியை அனுபவிக்கிறார்கள் – அவர்கள் தொலைதூர காவல் நிலையத்தில் ஒரு சிறையறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை. யதார்த்தத்தைப் பற்றிய அவர்களின் கருத்து மிகவும் வேறுபட்டிருந்தது – இருப்பினும் ஒரு பரஸ்பர புரிதல் படிப்படியாக வெளிப்படுகிறது.

ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள சமரசமற்ற தன்மை மற்றும் வன்மத்தன்மை முன்பு போலவே வலுவானதாக இருக்கின்றது. மேலும் போரின் செயல்கள் இரு கைதிகளையும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத வகையில் சூழ்ந்துள்ளன…»

இந்த செயல்திட்டத்திற்கு நோர்வே கலை மன்றம் (Norsk Kulturråd) நாடக நெறியாள்கை ஆதரவு வளங்கியது.

நடிகர்கள்:
Biniam Yhidego
Khawar “Gomi” Sadiq
Ali Djabbary
Ahmed Tobasi
நடனம்: தமிழினி சிவலிங்கம்
இசை: திரு கணேஷ் மற்றும் Aladin Abbas
மேடை வடிவமைப்பு: Karen Schønemann
ஒளி அமைப்பு: Paulucci Araujo


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

2 thoughts on “பொதுத் தளங்களில் செயற்பாடுகள் எதிராக தனியார் தளங்களில் செயற்பாடுகள்

  1. மயன் மக்களின் கலையும, -( கூத்து) என்று அழைக்கபஃபடும்,( தமிழும் அது),

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s