பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு

27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. பேர்கன் நகர ஆவணகம் ogarkitekter.no அனைவருக்கும் வணக்கம், பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அவர்கள் ஆவணக்காப்பிற்கான ஒர் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு [...]