05. யூன் 2020 அன்று "நோர்வே வாழ் தமிழர் ஆவணம்" எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. நோர்வே வாழ் தமிழர்கள், ஏனைய புலம்பெயர் வாழ் தமிழர்கள் போன்று, தமது மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்பு, தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். நோர்வேயில் வாழும் தனிநபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றனர். அச்செயல்பாடுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. [...]