வரலாற்றுப் பதிவுத் தளங்கள் │ Historical record platforms

நம் கதைகளையும் வரலாற்றையும் எழுத்து, ஒலி, ஒளி, பல்லூடகம் மற்றும் ஏனைய கலை வடிவப் படைப்புகள் மூலம் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்யலாம். அந்தப் பதிவுகள் எங்கள் வரலாற்றின் மறு கட்டுமானம் அல்லது மறு விளக்கக்காட்சி ஆகும். மறு விளக்கக்காட்சி மற்றும் மறு கட்டுமான வரலாற்றுப் படைப்புகள், குறிப்பிட்ட நேரம், இடம் மற்றும் செயல்பாட்டிற்கான ஆவணங்களால் ஆதாரப்படுத்த வேண்டிய தேவை இருக்கலாம். அவை பொதுவாக “மேற்கோள்கள் அல்லது ஆதார மூலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், ஒரு மறு விளக்கக்காட்சி மற்றும் ஒரு மறு கட்டுமான வரலாற்றுப் படைப்பு, அதனை உருவாக்கும் நபர் அல்லது அமைப்பின் ஆவணமாக எதிர்காலத்தில் மாறும். இந்த ஆவணங்கள் பொது மக்களுக்கு எமது இருப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கூறம் அவசியமான பதிவுகளாகும். எங்கள் கதைகள் மற்றும் வரலாறுகளை பொது அல்லது உத்தியோகபூர்வமானத் தளங்களில் பதிவு செய்ய, இங்கு சில இணையத் தளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பதிவுகளை உருவாக்கும் ஊடங்கள் அன்றி முழுமையான ஆவணப்படுத்தல், அல்லது வெளியிடுதல் கருவி அல்ல என்பதனை கருத்தில் கொள்ளவும்.

We can document and tell our stories and history through various forms such as text, audio, video, multimedia and other creative art forms. Those documents are re-construction or re-presentation of our history. The re-presentational and re-constructional history needs, most of the time, to be supported by archival documents from that particular time, place and activity. They are normally called “references or sources”. However, the re-presentational and re-constructional history documents will become archive of the person or organisation that produce that creation. These productions are essential records to tell the general public about our historical continuity of our existence. Here are few web platforms to tell our stories and history on public or official platforms. Please be aware that these are medium for creating records of your stories and not a tool for complete archiving or publishing.


நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்│Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki

தமிழ்

இப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) உள்ளூர் வரலாற்றை உருவாக்குவதற்கு நோர்வே வாழ் தமிழர்களை பங்காளராக வருமாறு அழைக்கின்றது.
நீங்கள் ஒரு விடயம், இடம், நபர், அமைப்பு, நிறுவனம் பற்றி பதிவிடலாம். அல்லது வேறு உள்ளூர் மற்றும் வரலாறு சார்ந்த எந்தவொரு கருப்பொருளைப் பற்றியும் எழுதலாம், புகைப்படத்தை பதிவிடலாம். (மேலதிகத் தகவல்)

Norwegian

Nå inviterer norsk lokalhistorisk institutt (NLI) alle tamilere i Norge til å bli en bidragsyter til å skape den lokalhistorien.
Du kan skrive eller legge ut en fotografi om en ting, sted, person, virksomhet, organisasjon eller noe annet som er lokalt og historisk for deg. (klikk her for mer informasjon)


உங்கள் வரலாற்றைப் பதிவு செய்வதற்கான தளங்கள்│Platforms to document your history


விக்கி தொழில்நுட்பம்│wiki technology

இங்கே இ. மயூரநாதன் தமிழில் விக்கி தொழில்நுட்பத்தைப் பற்றி சுருக்கமான விளக்கம் தருகின்றார் (02:31 – 15:07).

Here is a brief explanation of wiki technology by I. Mayooranathan in Tamil (02:31 – 15:07).


“Everything we do today becomes our history. One does not have to be a historian or researcher to document and write our local history. Only you can write and share your memories and experiences of what is local history for you.”

DsporA Tamil Archive. (2020). “Prosjekt om norsk-tamilsk kultur og historie på Lokalhistoriewiki“.

ஒன்றாக இணைந்து ஒன்றை உருவாக்குவோம்.
Let’s build something together.