DsporA முதல் DiasporA வரை

பாகம் 1

பின்னணி

செயல்பாடுகளும் நிகழ்வுகளும் கதைகள் உருவாவற்கு ஆதாரமாக உள்ளன. நிகழ்கால கதைகள் எதிர்கால வரலாறாகின்றன. இந்த வலைத்தளத்தின் கதை 2017ம் ஆண்டு நோர்வே வாழ் தமிழரின் புலம்பெயர் வரலாற்றைக் கண்டறியும் பயணத்தில் உருவானது. இந்த வலைத்தளம் முதலில் “Archive of Tamils in Norway” என்ற முகநூல் பக்கமாக வித்திட்டது. முகநூல் பக்கம் 23. ஏப்ரல் 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த முகநூல் பக்கம் நோர்வே வாழ் தமிழர்களின் வெளியீடுகளைச் சேகரிக்க அல்லது கண்டறிவதற்கான ஒரு தளமாக திறக்கப்பட்டது. அத்துடன் இந்த நாட்டில் உள்ள தமிழ் கல்விச் சேவைகள் பற்றிய வரலாற்று உண்மைகளை (historical facts) சேகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், விரைவில் ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் காப்பகப்படுத்தல் (archive) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முதன்மை தேவை அடையாளம் காணப்பட்டது.
07. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தின் பெயர் ” DsporA Tamil Archive” என்று மாற்றம் செய்யப்பட்டது.

DsporA முதல் DiasporA வரை

DsporA Tamil Archive அதன் பெயரை “DiasporA Tamil Archives” (DTA) என பெயர் மாற்றம் செய்கின்றது. “Diaspora” எனும் இயல்நிகழ்ச்சியே (phenomenon) “DsporA” என்ற பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மூல காரணம் ஆகும். ஆனால் அதற்குரிய இணையத்தள முகவரி (domain) கிடைக்காததால், www.dspora.no எனும் இணையத்தள முகவரியில் 22. யூலை 2020 அன்று வெளியிடப்பட்டது. அதன் மூலம் இந்த தளத்தின் பெயரும் “DsporA” ஆனது.

DsporA Tamil Archive வழமைக்கு மாறாக எழுதப்பட்ட “diaspora” எனும் சொல்லால் ஏற்படக்கூடிய சவாலை ஏப்ரல் மாதம் 2021ம் ஆண்டு அடையாளம் கண்டது. இதனால், பயனர்கள் இணைய தேடுபொறிகளில் இந்த வலைத்தளத்தைக் கண்டறிவதில் கடினம் உண்டாகலாம் என்பதை இனம் கண்டது. இந்த சவாலை தீர்க்கும் செயல்முறையாக, www.diasporatamil.no என்ற புதிய இணையத்தள முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

இருப்பினும், உருவான இந்த சவால் ஆவணப்படுத்தல் (documentation) தொடர்பான ஆங்கிலம், தமிழ் மற்றும் நோர்வேயிய மொழிச் சொற்கள் பற்றிய செறிவான மற்றும் அறிவூட்டும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. “DiasporA Tamil Archives” என்பதற்கான தமிழ் பெயரைக் கண்டறிய வழிவகுத்ததுடன் புலம்பெயர் எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon of diaspora), பண்டைய தமிழ் கடல் வணிகம் மற்றும் நாணயவியல் பற்றிய ஒரு புரிதலையும் உருவாக்கியது. இந்தப் பயணத்தில் நாம் அறிந்து கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

“DiasporA Tamil Archives” என்பது தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல், பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் உள்ளடங்கிய ஒரு காப்பக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாகும். இது தமிழ் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் பேணிப் பாதுகாத்தல் (preservation) துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஈடுபாடுள்ளவர்களுக்கும் ஒரு வள மையமாகவும், ஒரு «சமூக மற்றும் பங்கேற்பு” காப்பகமாகவும் (community and participatory archives)[1] இருக்கும்.

இந்தத் தளம் சமூக அடிப்படையிலான பேணிப் பாதுகாத்தல் முன்முயற்சியில் (community-based preservation movements) ஈடுபட்டிருக்கும் தமிழ் தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள், மற்றும் ”சமூக மற்றும் பங்கேற்பு” களஞ்சியங்களாகிய (community and participatory repositories) தமிழ் ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களிற்கு இடையில் ஒத்துழைப்புகளை (collaborations) ஊக்குவிக்கிறது. இத்துறையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தளங்களிற்கு இடையிலான பல வகையான ஒத்துழைப்புகள் (collaborations) புலம்பெயர் தமிழ் பாரம்பரியம் உட்பட தமிழ் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் கொண்டாடவும் ஒரு வள வலையமைப்பை உருவாக்கும்.

இந்தக் கட்டுரை தொடர் கட்டுரையாக வெளியிடப்படும். இது தமிழ் ஆவணப்படுத்தல் பண்பாட்டின் வரலாறு மற்றும் இலக்கிய பின்னணி மூலம் ”DsporA முதல் DiasporA வரை” எனும் பரிணாமத்தை விளக்கும்.

அடுத்த பாகம்: ”Diaspora”எனும் இயல்நிகழ்ச்சி (phenomenon)


அடிக்குறிப்பு

[1] Community archives (சமூகக் காப்பகம்) என்பது சமூக அடிப்படையிலான முன்முயற்சியாகும். இது ஒரு குறிப்பிட்ட ஆர்வம், நம்பிக்கை, மக்கள் குழு, சமூகம், இனம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகள் மற்றும் வரலாற்றை உள்ளடக்கி இருக்கும். அந்த கதைகள் மற்றும் வரலாற்றை பங்கேற்பு அணுகுமுறைகளூடாக (participatory approaches) ஆவணப்படுத்தி (document), பதிவு செய்து (record) மற்றும் பேணிப் பாதுகாக்கும் (preserves) தளங்களாக இருக்கும். சமூக அடிப்படையிலான நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் “சமூகக் காப்பகம்” என்ற சொற்பதத்தில் உள்ளடங்கும். சமூகக் காப்பகம் ஒரு சமூகத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய செயல்படும். இவை குறைவான பிரதிநிதித்துவம் (underrepresented) அல்லது பிரதிநிதித்துவப்படுத்தப்படாத (unrepresented) கதைகளை வழங்கும். இந்தத் தளங்கள் அடக்கப்பட்ட குரல்களின் எதிர் கதைகளை (counter-narratives) சொல்லும். இந்த சமூக காப்பகங்கள் வழக்கத்திற்கு மாறான காப்பக நடைமுறைளை தமது அணுகுமுறைகளாகக் கொண்டிருப்பதன் மூலம் பிரதான காப்பங்களிற்கும் வெளிப்புறத்திற்கும் இடையிலான பாலமாக செயல்படுகின்றன. இந்தத் தளங்கள் பகிரப்பட்ட அதிகார கட்டமைப்பைக் (shared power structure) கொண்டிருப்பதோடு சமூகக் கட்டுப்பாட்டின் (community-control) கீழ் இயங்கும்.

உசாத்துணை

Community Archives Community Spaces: heritage, memory and identity. (2020). (J. A. Bastian & A. Flinn, Eds.). Facet Publishing.
Participatory Archives: theory and practice. (2019). (I. Benoit, Edward & A. Eveleigh, Eds.). Facet Publishing.
Participatory Heritage. (2017). (H. Roued-Cunliffe & A. Copeland, Eds.). Facet  Publishing.


Creative Commons Licence

புதுப்பிக்கப்பட்டதுUpdated:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s