ஆவணப்படுத்தல் விழிப்புணர்வு
பதிவுகள் வைத்திருத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பரப்ப உதவலாம்.
அல்லது
உங்கள் நிறுவனம்/ அமைப்பு ஆவணப்படுத்தல் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ள ஒரு ஆவணப் பட்டறையை ஒழுங்கு செய்யலாம்.
அல்லது
நிறுவன/ அமைப்பிற்குள் ஒரு உள்ளக ஆவணப் பிரிவை உருவாக்குதல்
இன்று முதல் உங்கள் செயல்பாடுகளின் பதிவுகளை ஆவணப்படுத்திப் பேணிப் பாதுகாக்கும் முறையை ஆரம்பிக்க உங்கள் நிறுவனத்தில்/ அமைப்பில் ஒரு உள்ளக ஆவணப் பிரிவை உருவாக்குதல். இன்றைய நடவடிக்கைகளின் பதிவுகள் ஒரு இனத்தின் மற்றும் ஒரு தேசியத்தின் எதிர்கால ஆவணம் ஆகும்.
அதோடு
நிர்வாக மாற்றங்கள் வந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகம் சீராக செயல்பட உங்கள் அமைப்பின் யாப்பில் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தலை அமுல்படுத்தலாம். அதனுடன் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் திட்டம், நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறை விதிகள் கொண்ட வழிகாட்டி உருவாக்கலாம்.
அல்லது
ஆவணச் சேகரிப்பு
ஒரு அமைப்பின் ஆவணப் பொருட்களை சேகரிப்பது அவ்வமைப்பின் இன்நாள் நிர்வாகக்குழுவின் பணி ஆகும். ஆனால் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஆவணங்களை வைத்திருக்கும் அனைத்து முன்நாள் மற்றும் இன்நாள் உறுப்பினர்களின் பொறுப்பாகும். ஏனெனில் அந்த ஆவணப் பொருட்கள் ஒரு அமைப்பின் சொத்தாகும். அதோடு அவை ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும்.
அல்லது
ஒரு தனிநபர் ஒரு அமைப்பு சார்ந்த ஆவணங்களை தனது சேகரிப்பாக வைத்திருப்திலும் ஒரு வரலாறு உள்ளது. அந்த ஆவணங்கள் ஒரு தனிநபர் சேகரிப்பாக ஏன், எவ்வாறு உருவானது என்பதும் அந்த ஆவணங்களின் வரலாற்றுச் சூழலில் ஒரு பகுதி ஆகும். அதைச் சிதறடிப்பதைவிட அவரது காலத்திற்குப் பின்னர் அந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டம் அல்லது ஒப்பந்தத்தை இன்நாள் நிர்வாகம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். அச்சேகரிப்பு அந்த நபரின் பேயரிலேயே பேணிப்பாதுகாப்பது ஆவணச் சேகரிப்பின் தோற்றம், சூழல் மற்றும் நொக்கத்தைப் பேணிப்பாதுகாக்க உதவும்.
இலக்கு
ஆவணப்படுத்தல்!
‘ஆவணப்படுத்தல்’என்பது ஒரு செயல்முறை ஆகும். இச்செயல்முறை பதிவேடு, பேணிப் பாதுகாத்தல் மற்றும் பொது அணுக்கம் என்று பல படிநிலைகளை கொண்டது. ஒரு பதிவை எழுத்துரு, ஒலி, ஒளி அல்லது வேறு ஊடங்களில் பதிவு செய்வது ஆவணப்படுத்தலின் ஒரு படிநிலை ஆகும். ஒரு பதிவை உருவாக்கி அதனை சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடியவாறு பொது அணுக்கத்துடன் ஒரு களஞ்சியத்தில் பேணிப் பாதுகாக்கும்போதே ஒரு ‘ஆவணப்படுத்தல்’ செயல்முறை முழுமை அடைகின்றது.
நோக்கம்
இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் ஒரு அமைப்பின்/ நிறுவனத்தின் நிர்வாக ஒழுங்கை பராமரிப்பதாகும். நிர்வாகத்திற்கான பதிவுகளை வைத்திருப்பதன் நோக்கம் ஒரு நிறுவன கட்டமைப்பிலும் சமூகத்திலும் கட்டுப்பாடு, ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை மேம்படுத்துவது ஆகும். இந்த செயல்முறையின் இரண்டாம் கட்ட நோக்கம் இப்பதிவுகளை வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்களாக பேணிப் பாதுகாப்பதாகும். நம்பகத்தன்மையான மற்றும் உண்மையான (reliable and authentic) ஆவணங்களை உருவாக்குவதன் மூலம் அவை எங்கள் உரிமைகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளாக இருக்கும்.
கவனத்திற்கு
இது ஒரு சமூக செயல்முறை என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே பல ஆண்டுகள் எடுக்கக்கூடும். ஆனால் இச்சமூக செயல்முறை புலம்பெயர் வாழ் முதல் தலைமுறையினர் எம்முடன் இருக்கும் இக்காலத்தில் ஆரம்பிப்பது மிக அவசியமானது. அது இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையின் இருப்பிற்கு இன்றியமையாதது என்பதை மறந்துவிடாதீர்கள்.
DsporA Tamil Archive இன் பாத்திரம்
DsporA Tamil Archive இன் இணையத்தளம் ஒரு சுயாதீனமாக செயல்படும் தகவல் தளமாகும். இது தமிழர்கள் மற்றும் பிற புலம்பெயர் வாழ் சமூகங்களின் நிறுவன கட்டமைப்புகளில் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் பண்பாட்டை ஊக்குவிகும் தளம் ஆகும். அதோடு ஆவணப்படுத்தல் எனும் விழிப்புணர்வை கொண்டுவருவதை நோக்காகக் கொண்டுள்ளது.
DsporA Tamil Archive பரந்துபட்ட ஆவணங்களை பேணிப் பாதுகாக ஊக்குவிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை ஒன்றை மஞ்சள் நிறம் என்று கற்றுக் கொள்வதற்கு, அக்குழந்தைக்கு வெவ்வேறு வண்ணங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதனூடாக ஒரு குழந்தை ஒவ்வொரு நிறத்தின் தனித்துவத்தையும் அதன் அனுகூலம் மற்றும் விரதிகூலங்களையும் அடையாளம் கண்டு கொள்ளும். இது வரலாற்றிற்கும் பொருந்தும். நாம் பரந்துபட்ட கருத்துக்கள், பார்வைகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளைக் கூறும் ஆவணங்களை தன்னகத்தே கொண்டிருக்கும்போது, நாம் எந்தவிதமான சவால்களையும் கையாளவும் மற்றும் அதர்க்கான தீர்வுகளைக் காணவும் நாங்கள் வலுவோடு இருப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் வடிகட்டப்பட்ட ஆவணங்கள் நம் அறிவுத் திறனையே பலவீனப்படுத்தும்!
வரலாறு எப்பொழுதும் நமக்கு வழிகாட்டும்!
ஆனால் அந்த வரலாறு நமக்கு வழிகாட்ட, அது முழுமையானதாக இருக்க வேண்டும்!
புதுப்பிக்கப்பட்டது: 11.02.2021