ஆவணகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பண்பாட்டு வளங்களைக் கொண்டிருக்கும் ஒத்த களஞ்சியங்களாகத் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இந்த மூன்று வகையான களஞ்சியங்களின் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் பேணிப் பாதுகாத்தலின் அடிப்படை வேறுபட்டு நிற்கின்றன. அத்துடன் அவை எவ்வாறு பத்திரங்கள், கோப்புகள், மற்றும் ஆவணப் பொருட்களை ஒழுங்கமைக்கின்றன, மற்றும் ஒவ்வொரு களஞ்சியமும் அதன் பயனாளர்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதில் வேறுபாடு உள்ளது. களஞ்சியங்களின் கையகப்படுத்தல் கொள்கை, பொருட்களை வகைப்படுத்தும் விதம், ஆவணப்படுத்தும் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அணுக்கம் ஆகியவை அதன் சேகரிப்பு அலகின் அடிப்படியில் வேறுபடும். பொதுவாக ஒரு நாட்டில் இந்த மூன்று வகையான களஞ்சியங்களும் அன்நாட்டு அரசால் அல்லது அந்த அரசின் பொருளாதார ஆதரவுடன் நிர்வகிக்கப்படும். ஆனால் இங்கு பட்டியலிடும் தமிழ்க் களஞ்சியங்கள் தனியார் நிறுவனங்களாக, நன்கொடை மற்றும் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
நீங்கள் அறிந்த தமிழ் ஆவணகம், நூலகம் அல்லது அருங்காட்சியகம் பற்றி எங்களுக்கு அறியப்படுத்துங்கள்
மேலதிகம்:
ஆவணப்படுத்தல்│ ARCHIVING

ஆவணகம்
ஆவணம் அறிவின் முதன்மை ஆதார மூலம் ஆகும்.
ஆவணகம் வெளியிடப்படாத பொருட்களையும் சேமிக்கும்.
ஆவணகம் ஆவணப் பொருட்களின் குழுக்களை நிர்வகிக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த ஆவணச் சேகரிப்பைச் சுற்றி உள்ள குறிப்பிட்ட சூழலையும் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் (archive context).
ஒரு ஆவணகத்தில் திருடப்பட்ட அல்லது சேதமடைந்த ஒரு ஆவணத்தை மாற்றீடு செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகும்.
ஆவணகம் தொட்டுணரக் கூடிய மற்றும் எண்ணிம களஞ்சியங்களாக இருக்கலாம்.

நூலகம்
நூலகம் அறிவின் இரண்டாம் நிலை மூலம் ஆகும்.
நூலகம் என்பது வெளியிடப்பட்ட பொருட்களை சேமிப்பதற்கான இடம்.
பாரம்பரிய நூலகம் தனிப்பட்ட உருப்படிகளை கொண்டிருக்கும் (individual item). ஆனால் அவ்வுருப்படிகள் பொதுவாக தனித்துவமானதாக இருக்காது.
ஒரு நூலகத்தில் திருடப்பட்ட அல்லது சேதமடைந்த நூலை எளிதாக மாற்றீடு செய்யலாம்.
தொட்டுணரக் கூடிய மற்றும் எண்ணிம களஞ்சியங்களாக இருக்கலாம்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகங்கள் குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படியில் பொருட்களை சேகரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் கியூரேட்டோரியல் (curatorial) சூழலை வழங்குகின்றன.
இவை தொட்டுணரக் கூடிய களஞ்சியங்கள் ஆகும். இதில் ஒரு ஆவணகத்தில் இருக்கும் பொருட்களின் நகலையும் கண்காட்சிக்குப் பார்க்கலாம்.
ஆசியா
நூலக நிறுவனம்
ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். 2005 ஆம் ஆண்டு எண்ணிம சமூக ஆவணகம் மற்றும் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
ஈழம்.
www.noolahamfoundation.org
@noolahamfoundation
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
ரோஜா முத்தியா செட்டியார் என்ற தனியார் சேகரிப்பாளரின் தொகுப்பைப் பாதுகாக்கவும், பட்டியலிடவும், விரிவுபடுத்தவும் 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா.
http://rmrl.in
@rmrl.in
புச்சேரி தமிழ் அருங்காட்சியகம்
புதுச்சேரி தமிழ் அருங்காட்சியகத்தை அறிவன் அருளி 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவ்வருங்காட்சியகம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு வரலாற்றுக் கடிதங்கள், புகைப்படங்கள், நாணயங்கள் மற்றும் முத்திரைகள், வரைபடங்கள் மற்றும் பல பேணிப்பாதுகாத்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா
முகநூல்
வலையொளி
பாலு மகேந்திரா நூலகம்
ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு. கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நூலகத்தின் இணையத்தளம் 27.12.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஈழம்.
www.balumahendralibrary.org
@balumahendralibrary.org
தமிழிணையம் – மின்னூலகம்
https://www.tamildigitallibrary.in/
சிவபூமி அருங்காட்சியகம்
சிவபூமி அருங்காட்சியகம் தை மாதம் 25 ஆம் திகதி 2020 ஆண்டில் கலாநிதி ஆறு திருமுருகனால் நிறுவப்பட்டது, இதன் நோக்கம் இலங்கையின் கலாச்சார, மத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களை சேகரித்து அவற்றைப் பாதுகாத்தல், ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வி மற்றும் மகிழ்ச்சி நோக்கத்திற்காக அவற்றை பொதுமக்களுக்கு கண்காட்சிப் படுத்துதல்.
ஈழம்.
http://www.sivapoomimuseum.com/index_tamil.php?lang=ta
ஐரோப்பா
சைவநெறிக்கூடம்
1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற, சைவ மதத் தொண்டு நிறுவனம்.
2019 ஆம் ஆண்டு “தமிழர் களறி” அனும் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகமும் ஆரம்பிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து.
www.tamilskalary.com
@tamilskalary
ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும் – ETDRC
2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். ஈழத் தமிழர் பற்றி நூலுருவிலும், ஒலி ஒளி வடிவிலும் வெளிவந்துள்ள ஆவணங்கள், அறிக்கைகள், பிற ஆய்வேடுகளை சேகரித்துப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டது. இப்பொதுழுது முக்கியமாக நூல்கள் இச்சேகரிப்பில் உள்ளது.
ஐக்கிய இராச்சியம்.
0044 (0) 7817402704
noolthettam.ns@gmail.com
புதுப்பிக்கப்பட்டது: 22.06.2021