உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்

Norsk 08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. https://lokalhistorie.no/ இன்று எமது ஒவ்வொரு செயற்பாடும் எதிர்காலத்தின் வரலாறாக அமையும். நமது உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி எழுதுவதற்கு ஒருவர் வரலாற்றாசிரியராகவோ அல்லது ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. உள்ளூர் வரலாறு சார்ந்த உங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் உங்களால் மட்டுமே எழுத முடியும். இப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local [...]