சிலோனிலிருந்து ஔக்ரா வரை

English

1973 ஆம் ஆண்டு சிலோனிலிருந்து (இன்று இலங்கை) “Aukra bruk” இற்கு வந்த இரண்டு தமிழ் தொழிலாளர்களைப் பற்றி இந்த நோர்வேயிய செய்தித்தாள் நறுக்கு பேசுகின்றது. “Aukra bruk” என்பது ஒரு கப்பல் கட்டும் தளம் ஆகும். அது மோரே மற்றும் றும்ஸ்டால் எனும் (Møre and Romsadal) மாகாணத்தில், ஔக்ரா (Aukra) எனும் நகராட்சியில் உள்ள கோஸ்சன் (Gossen) எனும் தீவுவில் அமைந்துள்ளது.

“Aukra bruk”. Photo by Eilif Næss. The picture is from the archive of the newspaper, “Tidens Krav”, from the period of 1970-1994. Now this photo is in Nordmøre museum’s photo collection. (digitaltmuseum.no)

கடந்த இரண்டு மாதங்களாக கப்பல் கட்டும் தளத்தில் ஒரு வேலைக்காக பூலோகநாதன் நடராஜா மற்றும் சண்முகம் கந்தையா நாகராசா கோஸ்சனில் (Gossen) தற்காலிகமாக குடியேறியதாக இக்கட்டுரை நிருபர் எழுதுகிறார். வெப்பமான காலநிலைச் சூழலைக் கொண்ட தெற்கிலிருந்து வந்த இந்த இரண்டு இளைஞர்களும் பலத்த காற்றுடன் வெளிப்படும் இடமான ரோம்ஸ்டாலின் (Romsdal) வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இயந்திரக் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு தொழிற்பயிற்சிக்காக வந்துள்ளனர்.

இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து இலங்கையில் உள்ள குருநகரில் வெவ்வேறு கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான ஒரு பட்டறை வைத்திருந்தனர். அதற்கு அவர்கள் “யாழ் மரைன் இன்ஜினியரிங்”1 என்று பெயரிட்டனர் என்பதை நாகராசா DsporA Tamil Archive விடம் தெரிவித்தார். அவர்கள் Cey-Nor உடனான பணி நிமிர்த்த நல்லுறவையும், மற்றும் அன்ரெனி இராஜேந்திரத்துடன்2 ஒரு நல்ல நட்பையும் கொண்டிருந்தனர். இக்காலப்பகுதியில், அன்ரெனி நோர்வேயில் இருந்து தனது குடும்பத்துடன் மீண்டும் இலங்கைக்குக் குடிபெயர்ந்திருந்தார். நோர்வேயில் உள்ள தனது நண்பர் ஒருவர் மூலம் அன்ரெனி இவ்விருவரையும் “Aukra bruk”க்கு பரிந்துரைத்தார். அவர்கள் இவ்விருவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டினர்.

இக்காலப் பகுதியில், நோர்வே வெளியுறவு ஆலோசகர் இந்தியாவில் டெல்லியில் மட்டுமே இருந்தார். அவர் 1971 ஆம் ஆண்டில் “Aukra bruk” அனுப்பி வைத்த «பயண வவுச்சரைப்»3 பெற்றார். ஆனால் பங்களாதேஷ் விடுதலைப் போரின் காரணமாக பூலோகநாதனும் நாகராசாவும் அந்தப் «பயண வவுச்சரை» 1973 ஆம் ஆண்டு வசந்த காலத்திலேயே தாமதமாகப் பெற்றுக் கொண்டனர். இறுதில் பூலோகநாதன் (28) மற்றும் நாகராசா (26) ஆகியோர் 20 ஆம் திகதி நவம்பர் மாதம் 1973 ஆம் ஆண்டு நோர்வேயில் தரையிறங்கினர்.

“Fra Ceylon til Aukra” (ஆண்டு தெரியவில்லை, அநேகமாக “Romsdals Budstikke”). இடது பக்கம் நாகராசா மற்றும் வலது பக்கம் பூலோகநாதன். பூலோகநாதனிடமிருந்து எண்ணிமப் படமாகப் பெறப்பட்டது. நாகராசாவுடனான உரையாடலின் அடிப்படையில் அவர்கள் “Aukra bruk” இல் பணி ஆரம்பித்து சிறிது காலத்திற்குப் பிறகு நேர்காணல் காணப்பட்டனர்.

நாகராசாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், இது “Romsdals Budstikke” எனும் செய்தித்தாளின் கட்டுரையாக இருக்க வாய்ப்புள்ளது. DsporA Tamil Archive இதன் மூல ஆவணப் பொருளை அதன் செய்தித்தாள் ஆவணத்திலிருந்து கண்டெடுக்க முயற்சித்தது. அதன் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகத்தைத் தொடர்புகொண்டது. இந்த அரச நிறுவனம் “அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை சேகரித்து, பேணி பாதுகாத்து மற்றும் அணுக்கத்திற்குக் கிடைக்கச் செய்யும்” பணிகளை மேற்கொள்கின்றது. அதில் நோர்வேயில் வெளியான செய்தித்தாள்களும் உள்ளடங்கும். எண்ணிமமயமாக்கப்பட்ட செய்தித்தாள்கள் அவர்களின் இணையத்தளத்தில் கிடைக்கின்றன. எதிர்பாராதவிதமாக, “Romsdals Budstikke” எனும் செய்தித்தாளின் 1970 களின் வெளியீடுகள் எண்ணிமமயமாக்கப்படவில்லை. எனவே, மைக்ரோ ஃபில்ம்களில் (microfilms) தேட அறிவுறுத்தப்பட்டது. அவை ஒஸ்லோ, Solli Plassல் அமைந்துள்ள நோர்வேயிய தேசிய நூலகத்தில் பொது அணுக்கத்திற்குக் கிடைக்கின்றன. அல்லது முன்பதிவின் அடிப்படையில், மைக்ரோஃபில்ம் கருவி கொண்ட, அருகாமையில் அமைந்துள்ள ஓர் நோர்வேயிய உள்ளூர் பொது நூலகத்தில் பயன்படுத்தலாம்.

நோர்வேயிய தேசிய நூலகம்
https://www.nb.no/

மேற்கோள்:

1 யாழ் என்பது ஈழத்தில் (இலங்கை / சிலோன்) உள்ள யாழ்ப்பாண குடாநாட்டின் ஒரு குறியீட்டுப் பெயர் ஆகும்.

TamilNet. (2008). Jaffna/ Yaazhppaa’nam/ Yaazhppaa’nap Paddinam/ Yaazhppaa’naayan Paddinam.  Hentet fra https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26501

2 அன்ரெனி இராஜேந்திரம் 1956 இல் நோர்வேக்கு வந்த முதல் ஈழத் தமிழர்.

3«பயண வவுச்சர்» (travel voucher) ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டுப் பெறப்படும் பயண அனுமதி.

பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

நுட்பம்

English

“நுட்பம்” (NUDPAM – meaning “The technique”) எனும் ஆண்டு மலர் “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” எனும் ஓர் மாணவர் அமைப்பால் வெளியிடப்பட்டது. 1998 ஆம் அண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் புகைப்படங்களை யாழினி தேவ இரக்கம் DsporA Tamil Archive க்கு அனுப்பி வைத்தார். அவர் 1990-களின் துரண்யம் பல்கலைக்கழக மாணவராவார். மொத்தமாக ஒரு சில பதிப்புகள் வெளியிடப்பட்டன.

1980 களின் பிற்பகுதியில், துரண்யத்தில் சில தமிழ் மாணவர்களால் ஒரு தமிழ் ஒன்றுகூடல் குழு உருவாக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மறைந்த பேராசிரியர் துரைராஜா, ஓகஸ்ட் 1993 இல் துரண்யத்துக்கு வருகை தந்திருந்தார். அவரது ஆலோசனையின் அடிப்படையில் ஒன்றுகூடல் குழு “தமிழ் மாணவர் கழகம் துரண்யம், நோர்வே” என்று உருவாக்கப்பட்டது.

இந்த மலர் இப்போது ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். இது ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் துரண்யம்மில் மாணவர்களான கதையைக் கூறும் ஓர் சான்று. இந்த ஆவணம் 1989 க்கு முன்னும் மற்றும் பின்னும் தமிழ் மாணவர்களுடைய சமூக நிலையைக் கூறுகின்றது. 1989 க்கு முன்னர் வெளிநாட்டுப் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து நேரடியாக நோர்வேயிய பல்கலைக்கழக அனுமதியை விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களின் பல்கலைக்கழக அனுமதியின் அடிப்படையில் மாணவர் அயல்நாட்டு நுழைவுச்சான்று (student visa) பெற்று நோர்வேக்கு பயணம் செய்யலாம்.

தமிழ் எழுத்துக்களை கணினிமயமாக்குவது என்ற செயற்பாடு 1980 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது பற்றிய இன்னும் ஒரு வரலாற்றுக் குறிப்பின் சான்றாக இந்த ஆவணம் அமைகின்றது.

இந்த வகையான வெளியீடுகள் தனியார் வீடுகளில் பொக்கிசங்களாக உள்ளன. இந்த மலர், மற்றும் இதுபோன்ற பிற வெளியீடுகள், ஒரு நோர்வேயிய ஆவணகத்தில் ஆவணப்படுத்துவதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது. இவை நோர்வே-தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆவணங்கள் ஆகும். அவை சமூகத்தைப் பற்றிய பல்வேறு கதைகளைச் கூறும் சான்றுகள். இவ்வாறான ஆவணங்களுக்கு பொது அணுகல் வழங்கப்படும்போது, ​​அவை உலகெங்கிலும் வாழும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் உத்வேகம் அளிக்கும் ஆவணங்களாகின்றன.

பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

“தமிழ் 1” – நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல்

English

16. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

“தமிழ் 1” என்பது நோர்வேயில் தாய்மொழி கல்விக்காக (morsmålsopplæring) நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல். இந்த பாடநூல் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

நோர்வேயில் Kulturbro பதிப்பகம் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் இந்த
நூல் திட்டத்தை நடாத்தியது. இது 1995 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு “தமிழ் 2” Kulturbro பதிப்பகத்தால் Nasjonalt læremiddelsenter (தேசிய கற்பித்தல் உபகரண மையம்) இன் பொருளாதார ஆதரவுடன் வெளியிடப்பட்டது.
https://kulturbro.no/boker/index.htm#morsmalslareboker_for_minoritetsspraklige_barn

“தமிழ் 1” நூல் விபரம்:
நூல் ஆசிரியர்: பிலோமினம்மா ஜோர்ஜ்
தமிழ் ஆலோசகர்கள்: நாகரடணம் ரத்னசிங்கம் மற்றும் தயாளன் வேலாயுதப்பிள்ளை
நோர்வேய ஆலோசகர்கள்: Hilde Traavik og Anne-Lis Øvrebotten
ஓவியர்: Freda Magnussen
வெளியீடு: Kulturbro Forlag AS
வெளியீட்டு இடம்: ஓசுலோ
ஆண்டு: 1995

“தமிழ் 1” நூல் விபரம்:
நூல் ஆசிரியர்: பிலோமினம்மா ஜோர்ஜ்
தமிழ் ஆலோசகர்: தயாளன் வேலாயுதப்பிள்ளை
நோர்வேயிய ஆலோசகர்: Anne-Lis Øvrebotten
ஓவியர்: Freda Magnussen
வெளியீடு: Kulturbro Forlag AS
வெளியீட்டு இடம்: ஓசுலோ
ஆண்டு: 1997

“தமிழ் 1” மற்றும் “தமிழ் 2” இப்பொழுது மீள்பதிப்பு செய்யப்படுவது இல்லை என்பதால் இன்நூல் அச்சுப் பிரதியாக (photocopied pages) கிடைக்கப்பெற்றது. பிலோமினம்மா ஜோர்ஜின் மகள் கரோலின் தேவநாதன் மூல நூலினை தனது தனிப்பட்ட ஆவணங்களாக வைத்திருக்கின்றார்.

இந்த நூல் நோர்வே நூலகங்களில் உள்ளது. ஆனால் இன்நூல் ஒரு நோர்வேயிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சிக்கின்றேன். ஏனெனில் ஒரு வெளியீடு ஒரு நூலகத்தில் இருப்பதும் ஒரு ஆவணக்காப்பகத்தில் இருப்பது இரு வேறு விடயங்கள்.

பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

ஈழ வரைபட சேகரிப்பு

English

15. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

வரைபடங்கள் என்பது ஒரு இனத்தின் வரலாறு மற்றும் அவர்களின் உரிமைகளை நிலையாட்டும் ஆவணப் பொருட்கள் ஆகும். மிக முக்கியமாக அவை நகராட்சி, மாவட்டம் மற்றும் நாட்டின் குடிமக்கள், பிராந்திய வாரியங்கள் மற்றும் புவியியல் உள்கட்டுமானத்தையும் அதன் நிலப் பரப்புகளையும் பாதுகாக்கின்றன.
«Kartverket» என்பது ஓர் நோர்வே அரசாங்கப் பிரிவு, இது 1773 ஆம் ஆண்டு முதல் நோர்வே வரைபடங்களைக் கையாண்டு வருகின்றது.https://www.kartverket.no/en/
நோர்வேயின் தேசிய நூலகத்தில் நோர்வே, நோர்டிக் மற்றும் வடதுருவப் பகுதிகளின் வரைபடங்களின் ஆவணக்காப்பகத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் காப்பகத்தில் உள்ள மிகப் பழைய வரைபடம் 1482 ஆம் ஆண்டில் இருவாக்கப்பட்டது. https://www.nb.no/kartsenteret/காப்பகம் வரைபடங்களின் «சேகரிப்பு/ collection» களை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன.

நோர்வே வாழ் சரவணன் கோமதி நடராசா நனது முகநூல் இடுகையில் தான் உயர் தெளிவுத்திறன் கொண்ட இலங்கையின் பழைய வரைபடங்களை சேகரித்துள்ளதை எழுதுகின்றார். இது ஒரு எண்ணியம்/ digital ஆவண சேகரிப்பு ஆகும். இது ஒரு குறிப்பிட்ட வடிவம்/ format (வரைபடம்) மற்றும் கருப்பொருள்/ topic (இலங்கை) ஆகியவற்றின் அடிப்படையில் «சேகரிப்பு/ collection» (ஒரு தனியார் ஆவண வகை/ a type of private archive) க்கு ஒரு எடுத்துக்காட்டு. படத்தில் 1590 ஆம் ஆண்டு திருகோணமலையில் வரைபடம் ஆகும். இது ஜோடோகஸ் ஹோண்டியஸ் (Jodocus Hondius) ஆல் வரையப்பட்டது. இருப்பினும், இது 1620 ஆம் ஆண்டு வரையப்பட்டுள்ளதாக் சிலர் கூறுவதை அவர் குறிப்பிடுகிறார். மூல ஆவணப்பொருள் (original) ஆம்ஸ்டர்டாமில் உள்ளது.
இதேபோல் பல தமிழர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் கருப்பொருளின் அடிப்படையில் இத்தகைய «சேகரிப்பு/ collection» ஐ செய்கிறார்கள். பொதுவாக இலங்கையுடன் தொடர்புபட்டவையாக உள்ளது.

பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

ஆவணங்கள் வரலாறு, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஆதார மூலங்கள்

English

14. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

NDLA உயர்நிலை பள்ளி மாணவர்கள் (videregående skole elever) பயன்படுத்தும் நோர்வே தேசிய டிஜிட்டல் கற்றல் அரங்கம் ஆகும்.

அன்ரெனி இராஜேந்திரம் 1988 ஆம் ஆண்டு “Mennesker imellom – Portrett av den andre siden” (“இடையில் உள்ளவர்கள் – மறுபக்கத்தின் உருவப்படம்”) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக NRK.க்கு அவர் வழங்கிய நேர்காணல்.

இங்கு, 1988 ஆம் ஆண்டு NRK (நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சி) அன்ரெனி இராஜேந்திரத்தை நேர்கண்டு உருவாக்கிய ஒலியொளிப்பட அறிக்கையை NDLA பயன்படுத்தியுள்ளது. அன்ரெனி இராஜேந்திரம் யாழ்ப்பாணத்திலிருந்து ஈருருளியில் பயணம் செய்தார். கடல் மற்றும் மீன்பிடித்தல் பற்றிய கல்வி அறியவைப் பெற அவரது திட்டமிட்ட இலக்காக இங்கிலாந்து நாட்டை நோக்கி பயணத்தித்தார். இங்கிலாந்தில் அவர் சந்தித்த நண்பர்கள் கடல் மற்றும் மீன்பிடித்தல் பற்றிய கல்வி அறிவிற்கான நாடு நோர்வே என்ற தகவலைத் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து 1956 ஆம் ஆண்டில் நோர்வேயில் கால் பதித்த முதல் ஈழத்தமிழர் இவர். இந்த வீடியோ அறிக்கையில், அந்தோணி அடையாளத்தைப் பற்றி பேசுகிறார்.

அவர் 1956 ஆம் ஆண்டில் நோர்வேக்கு வந்த முதல் தமிழர் ஆவார். இவ்வொலியொளிப்பட அறிக்கையில் அன்ரெனி இராஜேந்திரம் அடையாளம் என்பதைப் பற்றி பேசுகிறார்.

இவ்வொலியொளிப்பட அறிக்கை இப்போது NRKவில் ஆவணமாகும். NDLA இந்த ஆவணப் பொருளைப் பயன்படுத்தி, “விவரிக்கக்கூடிய மற்றும் டைனமிக் அடையாளம்” (“descriptive and dynamic identity”) பற்றிய ஓர் கல்விப் பயிற்சியை உருவாக்கியுள்ளது.
https://ndla.no/nn/subjects/subject:18/topic:1:194233/topic:1:78143/resource:1:74649

ஆவணத்தின் விவரங்கள்:
அசல் தலைப்பு: “Mennesker imellom – Portrett av den andre siden”
நீளம்: 19 நிமிடம்
தயாரிப்பு ஆண்டு: 1988
ஒளிபரப்பு: NRK1 வியாழக்கிழமை 3. மார்ச் 1988
https://tv.nrk.no/se?v=FHLD00000388
இந்த வீடியோ இப்பொழுது இந்த வலைத்தளத்தில் இல்லை. ஆனால் ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்தில் அல்லது NRK ஆவணத்தில் இருக்கும்.

மேற்கோள்:

NRK. (1988). https://players.brightcove.net/4806596774001/BkLm8fT_default/index.html?videoId=ref:82405. Visited 14.07.2020