உள்ளக ஆவணகம் உருவாக்க ஒரு உந்துதல்

English

பரவலான அழைப்பு
நோர்வேயிய தேசிய நூலகத்தின் பேணிப் பாதுகாப்பு மற்றும் எண்ணிமமயமாக்கல் நடவடிக்கைகள்

இது நோர்வேயில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்குமான ஒரு பரவலான அழைப்பு. DsporA Tamil Archive நோர்வேயிய தேசிய நூலகத்துடன் (the National Library/ Nasjonalbiblioteket) உரையாடலில் உள்ளது. ஒரு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தையும் (guided tour) தனியார் ஆவணங்களைப் பற்றிய உரையாடலையும் ஏற்பாடு செய்து தருவதற்கான எமது கோரிக்கையின் அடிப்படையில் நோர்வேயிய தேசிய நூலகம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட் -19 காரணமாக, வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் உரையாடல் இணைய வழி உரையாடலாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் நோக்கம்:
ஆவணம் என்றால் என்ன, உங்கள் நிறுவன அமைப்பின் ஆவணங்கள் எந்த விதத்தில் உங்கள் நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது, மற்றும் உங்கள் அமைப்பு அதன் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எவ்வாறு ஆவணப்படுத்தலாம் என்பது பற்றிய பொதுவான அறிமுகம் மற்றும் தகவல்களைப் பெற அமைப்புகள் / நிறுவனங்கள் இதை ஒரு “உந்துதலாகப்” பயன்படுத்தலாம்.

உங்கள் பதிவுக்கு நன்றி! மேலதிக விபரம் விரைவில்.


புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்

படம்: wikipedia

கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர்.

அந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின் உள்ளக ஆவணகத்தை (தனியார் ஆவணங்களில் ஒரு வகை) கனடாவில் பேணிப் பாதுகாத்தல், ஆவணங்களை எண்ணிமமயமாக்குதல் மற்றும் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை ஆவணப்படுத்தல் பற்றிய தகவல்கள் மற்றும் நடைமுறைகளை கோரியுள்ளோம். அதற்கு ஒரு தானியங்கிப் பதிலைப் பெற்றுக் கொண்டோம். உலகளாவிய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, Library and Archive Canada அதன் பொது சேவை மையங்கள் மற்றும் ஆலோசனை அறைகள் (consultation rooms) மற்றும் அதன் பல சேவைகளை படிப்படியாக மீண்டும் பொது மக்களுக்காக தொடங்கியுள்ளது. எங்கள் கேள்விக்கு அவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்றும், ஆனால் மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க 4 மாதங்கள் ஆகலாம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

DsporA Tamil Archive குறிப்பிட்ட தமிழ் அமைப்புடன் தொலைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் இப்போது Library and Archive Canada ற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்து நேரடி தொடர்பு மேற்கொள்ளவுள்ளனர். இதனுடன் கனடாவில் தனியார் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தலில் உள்ள உரிமையைப் பற்றிய சட்டபூர்வ முறைகளைக் கேட்டறிவது பொருத்தமானதாக இருக்கும். நோர்வே ஆவணச் சட்டத்தின்படி, ஒரு தனியார் ஆவணம் (அரசாங்க அமைப்புகள்/ திணைக்களங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களைத் தவிர அனைத்து வகையான ஆவணங்கள்) இரண்டு வெவ்வேறு உரிமை முறைகளின் கீழ் ஒரு ஆவணகத்தில் பேணிப் பாதுகாக்கப்படலாம்.

 1. ஒப்படைத்தல் (handing over/ avlevering)
 2. வைப்பு (depositing/ deponering)

இதன் முக்கிய வேறுபாடு ஆவணங்களின் உரிமையில் உள்ளது.
“ஒப்படைத்தல்” ஒழுங்கு முறையில், ஆவணங்களின் உரிமை ஆவணகத்திடம் முழுமையாக வழங்கப்படுகிறது. அதாவது ஆவணப் பொருட்களில் பாதுகாக்க வேண்டியுள்ள இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை  (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) கருத்தில் கொண்டு ஆவண அணுகலுக்கான மதிப்பீட்டு  அதிகாரம் ஆவணகத்திடம் கொடுக்கப்படும். மறுபுறம், “வைப்பு” என்பது ஆவண உருவாக்குனரிடம் முழு உரிமையும் இருக்க, ஆவணங்கள் ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும்.
(“ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுக்கு முறைவகள்” பற்றி மேலதிகமாக வாசிக்க)

உங்கள் குடியிருப்பு நாட்டில் உள்ள ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து வகையான அடக்குமுறைகளைக் கண்ட தமிழர்களின் நீண்ட கால வரலாற்றில் தகவல் தெரிவிப்பு மற்றும் தகவல் பெறுதல் உரிமை நிராகரிப்பும் உள்ளடங்கும். 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கும் திறனை அழிப்பதற்கான ஒரு பண்பாட்டு இனப்படுகொலைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவை அறிந்தோ அல்லது அறியாமலோ பண்பாட்டு மற்றும் வரலாற்று தகவல்கள் மற்றும் சான்றுகளை தடுத்து வைத்தல், மறைக்கப்படுதல், அழிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளிற்குள்ளாகுகின்றன.

முழுமையான பேணிப் பாதுகாத்தல் என்பது எந்தவொரு இயற்கை, மனித அல்லது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகளிலிருந்தும் பண்பாட்டு மற்றும் வரலாற்று ஆவணங்களை நன்கு கவனித்துப் பேணிப் பாதுகாத்தல் ஆகும். பேணிப் பாதுகாத்தலில் பொது அணுகலும் அடங்கும். இதுவே ஒருவரின் வாழ்க்கை முடிந்த பின்னரும் வரலாற்றை தொடர்ந்து வாழ வைக்க ஒரே வழி.


“ஆவணங்கள் இருப்பிற்கான சான்றுகள்.”

DsporA Tamil Archive

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

தனிநபர் ஆவணம்: பேர்கன் நகர ஆவணகத்தைப் பார்வையிட்ட தமிழர்கள்

English

பிலோமினம்மா ஜோர்ஜின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமை 27 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2020 அன்று பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர். கரோலின் தேவனாதன், ஜெரின்மேரி ஜோர்ஜ் கிசெருட் மற்றும் தோமாய் மதுதீனு ஜோர்ஜ் ஆகியோர் பேர்கன் நகர ஆவணகத்துடன் மேற்கொண்ட இரண்டாவது தமிழர் சந்திப்பு ஆகும். அதே ஆவணகத்தை 26. யூன் 2020 அன்று பார்வையிட்ட முதலாவது தமிழர் ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை ஆவார். இவர் உள்ளூர் தமிழ் வானொலியான “தேன் தமிழ் ஓசை” (“Radio Tamil Bergen”) இன் பொறுப்பாளர். ஜூலியஸ் மற்றும் பிலோமினம்மாவின் குடும்பத்தினர் ஒரு ஆவணகத்தைப் பார்வையிட்டது இதுவே முதல் முறை ஆகும். அதேபோல் தமிழர்கள் தமது வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக பேர்கன் நகர ஆவணகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடனான சந்திப்புகளை மேற்கொண்டதும் பேர்கன் நகர ஆவணகத்துக்கும் இதுவே முதல்முறை ஆகும்.

பிலோமினம்மா ஜோர்ஜ் 1987 இல் நோர்வேக்கு புலம்பெயர்ந்தார். ஈழத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியராக இருந்த அவர், 1988 இல் பேர்கன் நகராட்சியில் உள்ள நோர்வேயிய அரசு பள்ளிகளில் தமிழ் தாய்மொழி ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தார். அதே நேரத்தில், அவர் பேர்கன் தமிழ் சிறுவர் பாடசாலையிலும் தாய்மொழி ஆசிரியராக தொண்டாற்ற ஆரம்பித்தார். இப்பள்ளி 1987 ஆம் ஆண்டு நோர்வேயில் ஆரம்பித்த முதல் தமிழ் பள்ளி ஆகும். பின்னர் 2002 ஆம் ஆண்டு ஆரம்பித்த அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம், பேர்கன் வளாகத்தில் பணி புரிந்தார்.
பிலோமினம்மாவும் அவரது கணவரும் 2004 ஆம் ஆண்டு போர் நிறுத்த காலப்பகுதியில் ஈழத்திற்கு திரும்பக் குடிபெயர்ந்தனர். அங்கு வன்னியில் இருந்த காந்தரூபன் அறிவுச்சோலையில்1 ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்த அவர் டிசம்பர் 2004 சுனாமியில் சாவடைந்தார். அவரது தாயகமான ஈழத்தில் அடக்கம் செய்யப்பட்டார். புலத்திலும் தாயகத்திலும் அவர் ஆற்றிய சமூகப் பணியை மதிப்பளிக்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் “நாட்டுப்பற்றாளர்” என்று மதிப்பளிக்கப்பட்டார்.

ஜூலியஸ் அன்டோனிபிள்ளை தனது “அமைப்பின் உள்ளக ஆவணத்தை” (“organisation archive”) ஆவணப்படுத்துவது பற்றி அறிந்து கொள்ள பேர்கன் நகர ஆவணகத்தைச் சென்று பார்வையிட்டிருந்தார். ஆனால் பிலோமினம்மாவின் குடும்பத்தினர் பிலோமினம்மாவின் “தனிநபர் ஆவணத்தை” (“personal archive”) ஆவணப்படுத்துவது தொடர்பாக அதே நிறுவனத்திற்குச் சென்றிருந்தனர். இவை “தனியார் ஆவணம்” (private archive) எனும் கிழையின் இரு வெவ்வேறு ஆவண வகை ஆகும். தாய்மொழி ஆசிரியரான பிலோமினம்மா “தமிழ் 1” (1995) என்ற நூலை எழுதினார். இது தேசிய கற்பித்தல் உதவி மையத்தின் ஆதரவுடன் நோர்வேயில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் பாடநூல் ஆகும். பேர்கன் நகர ஆவணகம் பிலோமினம்மா குடும்பத்தினரிடம் அவரது தயாரிப்புகள் மற்றும் அவர் மேற்கொண்ட வேலைகளை சேகரிக்குமாறு ஊக்குவித்தது. அதில் வெளியிடப்படா தமிழ் கவிதைகள், உரைகள் மற்றும் “தமிழ் 1” மற்றும் “தமிழ் 2” (1997) நூல்களிற்காக கையெழுத்துப் பிரதிகளான திட்டமிடல்கள், புகைப்படங்கள், குறுவட்டு, ஆல்பங்கள் அல்லது பிற படைப்புகளும் அடங்கலாம்.

கரோலின் தெவநாதன் (பிலோமினம்மா ஜோர்ஜின் மகள்) DsporA Tamil Archive இடம் பேர்கன் நகர ஆவணகத்திற்குள் இருந்தபோது அவரது குடும்பத்தினர் எவ்வளவு ஆச்சரியமும் பூரிப்பும் அடைந்தனர் என்று கூறினார். அந்த ஆவணகம் பேணிப் பாதுகாக்கும் பொருட்கள் எவ்வாறு எந்தவொரு அழிவிலிருந்தும் பேணிப் பாதுகாக்குகின்றது என்பதை அவர்களுக்கு அறிவித்து சுற்றிக் காண்பித்தது. அத்துடன் பொது அணுக்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் விளக்கியது. பேணிப் பாதுகாக்கும் பகுதி ஒரு மலையை குடைந்து அதனுள் வைக்கப்பட்டுள்ளது. அந்த மலைச் சுவர்கள் ஒரே வெப்பநிலையை பராமரிப்பதற்கான கட்டுமாணம் செய்யப்பட்டுள்ளதைக் கூறினார். ஏனெனில் வெப்பநிலையைகூட காலப்போக்கில் ஒரு காகிதத்தை சேதப்படுத்தும்.

தமிழர்கள் அனுபவித்த அடக்குமுறை வரலாறு குறித்தும் பிலோமினம்மா குடும்பம் பேசியிருந்தனர். தமிழர்கள் தாயகத்தில் தகவல் உரிமைக்கான தடை அனுபவித்ததன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவற் உருவாக்கத்தைப் பற்றி உரையாடியிந்துனர். அதற்கு நோர்வேயிய ஆவணகங்களின் செயற்பாட்டை அந்த ஆவணக நிறுவனம் கூறியாது. இங்கு அனைத்து வகையான ஆவணப் பொருட்களையும் ஆவணப்படுத்தும் செயற்பாட்டையே நோர்வேயிய ஆவணகங்கள் கொண்டுள்ளன. அதில் வேறுபாடான அல்லது எதிர்ப்பான அரசியல் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் வரலாறு ஆகியவற்றையும் உள்ளடங்கும். நோர்வே ஆவணகங்களின் செயற்பாடு இந்த நாட்டில் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுபாட்டிற்குப் பங்களிக்கின்றது.

ஒரு பரவலான அழைப்பு

கரோலின் தேவனாதன் பேர்கன் நகர ஆவணகம் தந்த ஓர் பரவலான அழைப்பைத் தெரிவித்தார். தமிழ் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்த தனிநபர்களையும் தமிழ் அமைப்புகளையும் அவர்கள் வரவேற்க ஆர்வமாக உள்ளனர்.
ஜூலியஸ் அன்டோனிப்பிள்ளை மற்றும் பிலோமினம்மா குடும்பத்தினர் பேர்கன் நகர ஆவணகத்திற்கு அவர்கள் சென்று வந்த அனுபவங்களையும் சிந்தித்தனைகையும் குறித்து ஏனைய தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றார்கள். இதற்கான முதல் கட்டமாக தமிழர்கள் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். பின்னர் உங்கள் இடத்தில் இருக்கும் ஒரு தேசிய, மாவட்ட அல்லது நகராட்சி ஆவணகத்தைச் சென்று பார்வையிட ஓர் வாய்ப்பளியுங்கள்.

தமிழ் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதற்கு ஆவணப்படுத்தல் பற்றிய புரிதலை பெற்றுக் கொள்வற்கான வாய்ப்பை அளித்தமைக்கு நோர்வேக்குப் புயம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களுக்கு நன்றிகள். அதோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தமிழர்கள் தங்களது தனிப்பட்ட அல்லது தங்களது அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் ஆவணப்படுத்தல் எனும் செயற்பட்டைக் கொண்டுவருவதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது.


பின்குறிப்பு
1 “காந்தரூபன் அறிவுச்சோலை” ஈழப் போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளுக்கென அமைக்கப்பட்ட இல்லம் ஆகும். அதேபோல், “செஞ்சோலை சிறுவர் இல்லம்” பெண் பிள்ளைகளுக்கான இல்லமாகும்.


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 18.10.2020

வாய்மொழி வரலாறு

English

கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரிகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது.

ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதப்படும் நடைமுறைகளின் வளர்ச்சி தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) உருவாக்கி, கைப்பற்றி, அதனைப் பேணிப் பாதுகாக்கவும் வழிவகுக்காது என்பதை குறிப்பிட வேண்டிய அவசியம் உண்டு. பதிவுகளை உருவாக்கிக் கைப்பற்றாவிடின் ஆவணங்கள் உருவாகாது. ஆவணங்கள் இல்லாவிடின் பதியப்பட்ட வரலாறு இருக்காது. ஆனால் பதியப்படாத வரலாறு என்பதால் ஒரு வரலாறு நிக்ழவில்லை என்று அர்த்தமல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அவசியம்.

மறுபுறம், சங்க காலத்தில் ரோமானிய பேரரசுடன் தமிழர்கள் மேற்கொண்ட கடல் வழி வணிகம், அவர்களின் கடல் வணிக நிர்வாகத்திற்காக பதிவுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. அதாவது பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறைகள் இருந்திருக்க வேண்டும். ரோமானியப் பேரரசுடனான தமிழ் கடல் வணிகம் குறித்து கிடைக்கக்கூடிய அச்சுரு ஆவணங்கள் வெற்றின மொழி ஆவணப் பொருட்களாக உள்ளன. என்றாலும் அவை இன்றிவமையாதவை. உதாரணமாக, கிரேக்க-ரோமானிய கையேட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பான “The Periplus of the Eritrean Sea” (1912)1. இதனை வில்பிரட் எச். ஷாஃப் (Wilfred H. Schoff) மொழிபெயர்த்துள்ளார். இதன் மூலக் கையேடு துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிடும் கையெழுத்துப் பிரதி ஆவணமாகும். ஒரு கப்பலோட்டி (captain) கரையோரங்களில் எதிர்பார்க்கக்கூடிய தோராயமாக தலையிடும் இடைவெளிகளும் இதில் உள்ளடங்கும். கடல் வர்த்தகத்தில் உள்ள வணிக நடைமுறைகள், துறைமுகங்களில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் (சுங்க விதிகள்), தென்னிந்தியாவில் உள்ள பண்டைய தமிழகத்திற்கு2 வந்த வர்த்தகர்கள் பற்றிய விவரங்கள் (ரோமன், அரேபியா, மற்றும் இன்றைய இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்த வணிகர்கள்). அத்துடன் வணிக நிகழ்வுகள் மற்றும் முக்கிய வர்த்தக பொருட்கள் பற்றிய விவரங்கள் உள்ளடங்கும்.

நிர்வாகத்திற்கான இன்னுமோர் சான்று பண்டய அச்சுக்கள். சங்க காலத்தில் பயன்படுத்திய இவ்வச்சுக்கள் கீழடி அகழ்வாராய்ச்சியின் ஆறாவது கட்டப் பணியில் காண்டெடுக்கப்பட்டவை. தினமலர் தேசிய தினசரியின் அடிப்படியில், இவை பண்டைய ஆமை உருவத்தில் அமைக்கப்பட்ட அச்சுக்கள் ஆகும். நாடுகளை விட்டு வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை அடையாளம் காண இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் இதைக் கண்காணிக்க அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டிருக்கலாம். வெளிநாட்டவர்களை திறம்பட நிர்வகிக்கவும் அடையாளம் காணவும் அச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தினமலர் தேசிய தினசரி, 26th August 2020.

தமிழ் தனது வரிவடிவம், எழுத்து நடைமுறை, நாகரீகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இத்தகைய பண்டய வரலாற்றைக் கொண்டிருக்கும்போது, ஏன் பதிவுவேடு மற்றும் ஆவண நடைமுறைகள் வாய்மொழி வரலாறாக உருமாறியது?

பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் வரலாற்றின் தொடர்ச்சியைப் பேணிப் பாதுகாக்கின்றன. தமிழர்களிடையே பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாததற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணிகள் உள்ளன. உதாரணமாக, இடப்பெயர்வுகள், படையெடுப்புகள், காலனித்துவம், ஆளுகை பறிமுதல், போர் மற்றும் இராணுவமயமாக்கல். இதன் விளைவாக, எஞ்சியிருக்கும் வாய்மொழி வரலாற்றை எழுத்துரு, ஒலி அல்லது ஒளி வடிவங்களில் ஆவணப்படுத்த3 வேண்டிய அவசியத்தை இன்நிலை கொண்டு வந்துள்ளது. எழுத்துரு, ஒலி அல்லது ஒளி வடிவத்தில் வாய்மொழி வரலாற்றை பதிவு செய்வது என்பது புனரமைப்பு (reconstruction) அல்லது மீள்-வளங்கலுக்கான (re-presentation) வடிவங்கள் ஆகும். இது ஒரு முன் திட்டமிடப்பட்ட, இயக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட பொழுதுபோக்கு அல்லது வர்த்தகத்திற்கான ஓர் ஊடகத் தயாரிப்பு அல்ல. இருப்பினும், இது தனியுரிமைக் கொள்கை மற்றும் பதிவுசெய்யப்பட்ட வாய்மொழி வரலாற்றில் ஈடுபட்டுள்ள நபர்களின் இரகசியத்தன்மையின் அடிப்படையில் சில தணிக்கைகள் கொண்டிருக்கலாம்.

இக்கட்டுரையின் எழுத்தாளர் ஓர் உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களை நேர்காணல் செய்து வருகின்றார். இன்நூல் திட்டம் DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. அந்த உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நேர்காணல் வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது.

உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக, இக்கட்டுரையின் எழுத்தாளர் Memoar மற்றும் Minner.no வை தொடர்பு கொண்டிருந்தார். அத்தொடர்வில் வாய்மொழி வரலாறு பற்றிப் பெற்றுக் கொண்ட தகவல், அனுபவம் மற்றும் அறிவுப் பகிர்வுக்காக இங்கு வழங்கப்படுகின்றது.


உள்ளடக்கம்:
 • வாய்மொழி வரலாறு என்றால் என்ன?
 • வாய்மொழி வரலாறு: நேர்காணல் வழிகாட்டி
 • வாய்மொழி வரலாறு: நேர்காணல் செயல்முறை
 • வாய்மொழி வரலாறு: அனுகூலங்கள், பிரதிகூலங்கள்
 • வாய்மொழி வரலாறு எதிராக ஒலி-, ஒளி- அல்லது எழுத்துரு அடிப்படையிலான ஊடக தயாரிப்புகள்
 • வாய்மொழி வரலாறு: வடிவங்கள்
 • வாய்மொழி வரலாறு: எடுத்துக்காட்டுகள்
 • வாய்மொழி வரலாறு: தனியுரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம்
 • வாய்மொழி வரலாறு: உரிமை
 • வாய்மொழி வரலாறு: தோற்றம்
 • வாய்மொழி வரலாறு: பேணிப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு
 • Aavanaham.org
 • Minner.no
 • Memoar – வாய்வழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history)
 • Memoar இன் ஒரு பரவலான அழைப்பு


வாய்மொழி வரலாறு என்றால் என்ன?

வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழி பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஒரு செயல்முறையாகும். வாய்மொழி பாரம்பரியம், “orality” என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித தொடர்புகளின் முதல் மற்றும் இன்றும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள முறை. “வெறும் பேசுவதை” விட, வாய்மொழி பாரம்பரியம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு, கலை மற்றும் யோசனையை உருவாக்குவதற்கும், சேமிப்பதற்கும், கடத்துவதற்கும் ஒரு மாற்றத்துக்குள்ளாகும் மற்றும் மிகவும் மாறுபட்ட வாய்மொழி ஊடகத்தைக் குறிக்கிறது.

“வாய்மொழி வரலாறு பதிவு செய்யப்பட்ட நேர்காணல்கள் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுகளையும் தனிப்பட்ட வர்ணனைகளையும் சேகரிக்கிறது. ஒரு வாய்மொழி வரலாற்று நேர்காணல் பொதுவாக நன்கு தயார்படுத்திய நேர்காணல் காண்பவர் ஒரு நேர்காணப்படும் நபரிடம் கேள்வி கேட்பது மற்றும் அவர்களின் பரிமாற்றத்தை ஒலி அல்லது ஒளி வடிவத்தில் பதிவு செய்வது ஆகும். நேர்காணலின் பதிவுகள் எழுத்துருவாக படியெடுக்கப்பட்டு (transcribed), விவரணக் குறிப்பு இணைக்கப்பட்டு (summarized) அல்லது குறியிடப்பட்டு (indexed) பின்னர் ஒரு நூலகம் அல்லது ஆவணகத்தில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நேர்காணல்கள் ஒரு வெளியீடு, வானொலி அல்லது காணொளி ஆவணப்படம், அருங்காட்சியக கண்காட்சி, நாடகமாக்கல் அல்லது பிற பொது விளக்கக்காட்சிகளில் ஆராய்ச்சி செய்யப்படலாம் அல்லது பயன்படுத்தப்படலாம். பதிவுகளின் எழுத்துரு படியேடுகள் (transcribtion), பட்டியல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணப் பொருட்களையும் இணையத்தில் வெளியிடலாம். ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் (President Richard Nixon) தனது வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரைகள் போன்ற பதிவுகள் வாய்மொழி வரலாறு அல்ல. அதோடு பதிவுசெய்யப்பட்ட உரைகள், வயர்டேப்பிங் (wiretapping), ஒலி நாடாவில் பதியப்பட்ட தனிப்பட்ட நாட்குறிப்புகள் அல்லது நேர்காணல் செய்பவருக்கும் நேர்காணப்படும் நபருக்கும் இடையிலான உரையாடல் இல்லாத பிற ஒலி பதிவுகளை இது குறிக்கவில்லை. ”

Donald Ritchie (டொனால்ட் ரிச்சி)

சங்க காலத்தில் தமிழர்களிடம் நிர்வாகப் பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் முறைமை இருந்திருப்பதற்கான சான்றுகளுக்கு உதாரணம் அவர்களது கடல் வணிகம். இணையாக, நாட்டுப்புறவியல் மற்றும் பிற வாய்மொழி பாரம்பரியம் இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது, நிர்வாக பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் கூட வாய்மொழிப் பாரம்பரியமாக உருமாரி வருகின்றன. இந்த நிலை புலம்பெயர் நாடுகளில் பரவலாக உள்ளது.

வாய்மொழி வரலாறு: நேர்காணல் வழிகாட்டி

இக்கட்டுரையின் எழுத்தாளர் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்திற்காக நேர்காணல் வழிகாட்டிகளை உருவாக்கினார். நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த எழுத்தாளர் சுயமாக தொடங்கப்பட்ட திட்டம் இது ஆகும். இது DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை.

DsporA Tamil Archive “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை” எனும் கருப்பொருளின் அடிப்படையில் நேர்காணல் வழிகாட்டி தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது. இந்த வழிகாட்டி நோர்வே சூழலுக்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழிகாட்டியில் உள்ள கேள்விகள் பிற புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அந்தந்தப் புலம்பெயர் நாடுகளின் சூழலுக்கு ஏற்றவாறு கேள்விகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும்.
PDFWord

வாய்மொழி வரலாறு: நேர்காணல் செயல்முறை

படி 1:

இவ்வழிகாட்டியை ஒரு உத்வேகக் கரிவியாக அல்லது ஒரு நேர்காணலை மேற்கொள்வதற்கான படிமான வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம். “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை” எனும் கருப்பொருளுக்கு உட்பட்டு, இந்த வழிகாட்டியிலிருந்து நீங்கள் நேர்காணும் நபர் மற்றும் நேர்காணலின் சூழலுக்கு பொருத்தமாக கேள்விகளைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு நேர்காணலின் போது, நீங்கள் நேர்காணும் நபர் சொல்லும் கதை மேலும் சில கேள்விகளை உங்களுக்குள் எழுப்பக்கூடும். உங்கள் நேர்காணலின் நோக்கம் மற்றும் சூழலுடன் அக்கேள்விகள் பொருத்தமானவையாக இருந்தால், அக்கேள்விகளைக் கேட்கவும்.

மற்றொரு செயல்முறை, கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்குள் நேர்காணப்படும் நபர் அவரது கதையை சுதந்திரமாக சொல்ல ஆரம்பிக்கலாம். பின்னர், தேவைக்கேற்ப, நீங்கள் தயார்படுத்திய நேர்காணல் வழிகாட்டியிலிருந்து கேள்விகளைக் கேட்கலாம்.

நினைவில் கொள்க:

 • இவை பரவலான கேள்விகளாக இருக்க வேண்டும். அதாவது கேள்விகள் ஆம் அல்லது இல்லை என்ற பதிலைத் தர நேர்காணப்படும் நபரை வழிநடத்தக்கூடாது. அல்லது கேள்விகள் ஒரு சார் பதிலுக்கு நேர்காணப்படும் நபரை வழிவகுக்கக்கூடாது.
 • விவாதங்களுக்குச் செல்ல வேண்டாம். நேர்காணப்படும் நபர் சொல்லும் கதை அல்லது தகவல் நீங்கள் ஒரு நேர்காணல் செய்பவராக ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்.
 • நீங்கள் செய்தியைச் செவிமடுப்பவர் மட்டுமே தவிர பாதுகாவலர் அல்ல!

படி 2:

ஒரு பதிவு செய்த பின். ஒரு பதிவில் உள்ள தகவல்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதற்கு சம்மதமா என்பதை நேர்காணப்பட்ட நபர் சரிபார்த்து அனுமதி வழங்க அந்த ஒலி அல்லது ஒளிக் கோப்பை நேர்காணப்பட்ட நபருக்குக் காட்டுங்கள்.
ஏதேனும் தணிக்கைகள் இருந்தால், அவற்றைத் தணிக்கை செய்யவும்.

படி 3:

ஒரு பதியப்பட்ட வாய்மொழி வரலாறு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் மற்றும் பேணிப் பாதுகாக்கப்படலாம் என்ற விவரக்குறிப்புகளுடன் ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெறவும்.

படி 4:

பதிவுகளை சேமித்து மற்றும் பேணிப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்வும்.

Minner.no முறைமை

Minner.no ஐ DsporA Tamil Archive தொடர்பு கொண்டபோது, அவர்களும் இதே போன்ற செயல்முறையை கடப்பிடித்ததை கண்டறிந்தோம். ஆனால் அவை வாய்மொழி வரலாற்றுக் கோப்புகளை ஆராய்ச்சிப் பொருட்களாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. எனவே அவை ஆராய்ச்சி நோக்கங்களுக்கான விரிவான ஒப்புதல் படிவத்தைக் கொண்டுள்ளது. அவை ஒன்றில் பரவலான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத் திட்டத்துடன் கோப்புகளை இணையதளத்தில் கிடைக்கச் செய்கின்றது. ஒப்புதல் படிவம் ஒரு தற்காலிகமான இடைத்தரகர் பணியைச் செய்கின்றது. இது நேர்காணப்படும் நபர் கோப்பை தாமே நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் வரை அந்த ஒப்புதல் படிவம் தனது பணியைச் செய்யும். அதாவது, நேர்காணப்படும் நபர் எந்த நேரத்திலும் தனது நேர்காணல் கோப்பை இணைய அணுக்கத்திலிருந்து திரும்பப் பெறலாம் அல்லது எதிர்காலத்திற்காக அக்கோப்பை minner.no இல் விடலாம்.

Memoar முறைமை

வாய்மொழி வரலாற்றிற்கான “Memoar முறை” ஒரு கையேட்டாக அவர்களின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நேர்காணல் திட்டம் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அதனால் ஒரு வழிகாட்டி அனைத்து கருப்பொருள்கள் அல்லது தலைப்புகளிற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் நேர்காணல்களுக்கான வழிகாட்டி அல்லது வார்ப்புரு (Template) அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள் வழக்கமான பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றர். இப்பயிற்சி வகுப்புகள் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கருப்பொருள்களை பதிவு செய்ய விரும்பும் குழுக்கள் / அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது. பொதுவாக, உள்ளூர் வரலாற்றுக் குழுக்கள், அருங்காட்சியகங்கள் அல்லது பள்ளிகள் தங்கள் ஆண்டு விழாவைக் கொண்டாடப் போவதாக இருப்பார்கள் அல்லது இதுபோன்ற பேறு தருணங்களையொட்டி இப்பயிற்சி பகுப்புகளில் பங்கேற்கின்றனர். Memoar இணைய வழியில் இப்பயிற்சி பகுப்புகளை வழங்குகின்றர். அவர்கள் ஆங்கிலத்திலும் பயிற்சி பகுப்புகளை நடாத்த முடியும். ஆனால் பங்கேற்பாளர்கள் அல்லது தலைப்புகள் நோர்வேவுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும்.

வாய்மொழி வரலாறு: அனுகூலங்கள், பிரதிகூலங்கள்
அனுகூலங்கள்:
 • வாய்மொழி வரலாறு அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கும் ஆவணமற்ற வரலாறுகளை காப்பாற்றுவதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.
 • தங்களால் எழுத முடியாத நபர்களுக்கும், வேறு வழிகளில் ஆவணப்படுத்தப்படாத கதைகளுக்கும் குரல் கொடுக்கம் வழிமுறை.
 • வாய்மொழி வரலாற்றில் தங்கள் சொந்த கதைகளைச் சொல்லும் நபர்களும் கூறப்படும் தலைப்பு அல்லது கருப்பொருளைப் பற்றிய தங்களது முன்னோக்குகளையும் தருகிறார்கள்.
 • ஒரு ஒலி அல்லது ஒளி வழி வரலாற்றில் சம்பந்தப்பட்ட நபர் கூறும் வரலாறு, 50 மற்றும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த குறிப்பிட்ட காலம், நேரத்தைப் பற்றி இயன்ற அளவு நெருக்கமான பிரதிநிதித்துவத்தை அளிக்கிறது.
 • ஒலி அல்லது ஒளி வழி வரலாறு எழுத்துரு வடிவ வரலாறுகள் கொடுக்காத மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது.
 • ஒரு 50 ஆண்டுகால வரலாற்றை எழுதுவதை விட, பல தசாப்த கால வரலாற்றை ஒலி அல்லது ஒளி வழி பதிவுகளாக செய்வது நேர மிச்சப்படுத்தலாக இருக்கும்.
 • கடந்த காலத்தை பதிவு செய்து அக்காலத்தில் இருந்த தலைப்பு, நபர், பொருள், காலச் சூழல் போன்றவற்றின் ஓர் கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ள ஒரு பயனுள்ள வழிமுறை.
 • வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த கருவி.
பிரதிகூலங்கள்:
 • நேர்காணப்படும் நவர் அவரது நினைவகத்தை இழக்கக்கூடும்.
 • விவரங்களின் துல்லியம் பலவீனமடையக்கூடும்.
 • நேர்காணப்படும் நவர் அவர்கள் உண்மையாக அடைந்த அடைவுகளை விட அவர்கள் அடைய விரும்பியதைக் கூறக்கூடும்.
 • சிலர் நேர்மறையான சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். பின்னடைவுகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பார்கள்.
 • வாய்மொழி வரலாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சேகரிப்பை உருவாக்கக்கூடும்.

வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை பயன்படுத்துபவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள நேரம், சம்பவம், செயல், பரிவர்த்தனை பற்றிய விவரங்களை சரிபார்க்க/ உறுதிப் படுத்த பிற ஆவணங்களைத் தேட வேண்டி இருக்கும். இச்செயல்முறை வாய்மொழி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் ஒரு ஆராய்ச்சி அல்லது ஊடகத் தயாரிப்புகளிற்கு ஒரு இயற்கையான படிமுறைச் செயற்பாடாக இருக்கும். ஒருவர் மூல ஆதார விமர்சனங்களைச் (source criticism or information evaluation) செய்யும்போது இப்பிரதிகூலங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். இருப்பினும், வாய்மொழி வரலாற்றுச் செயற்பாட்டை ஊக்க இழப்புச் செய்யக்கூடாது. ஏனெனில் வாய்மொழி வரலாற்றில் பிரதிகூலங்களை விட அனுகூலங்களே அதிகமாக உள்ளன.

வாய்மொழி வரலாறு எதிராக ஒலி-, ஒளி- அல்லது எழுத்துரு அடிப்படையிலான ஊடக தயாரிப்புகள்

வாய்மொழி வரலாற்றுப் பதிவானது நேர்காணப்படும் நபருக்கு முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட நேர வரம்பு இல்லாமல் சுதந்திரமாக பேச அனுமதிக்கிறது. எனவே வாய்வழி வரலாற்றுப் பதிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை எடுக்கலாம். பொதுவாக ஒரு அமர்வு 1,5 – 2 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். மற்றொரு முக்கியமான கூறு என்னவென்றால், வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் ஒரு வரலாற்றை பதிவு செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது. இக்கூறு வாய்மொழி வரலாற்றை ஒரு பத்திரிகை/ ஊடக அல்லது பொழுபோக்கு/ வர்த்தக நோக்க நேர்காணலில் இருந்து வேறுபடுகின்றது. இந்த வகையான நேர்காணல்கள் ஒரு வரையறுக்கப்பட்ட நேர வரம்பிற்குள் குறிப்பிட்ட தகவல்களைப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டிருக்கும். அவை பொதுவாக தொகுக்கப்பட்டு ஊடக தயாரிப்புகளாகின்றன.

மறுபுறம், வாய்மொழி வரலாறு ஒரு சாதாரண ஒலி அல்லது ஒளிப் பதிவு ஆகும். உதாரணமாக, ஒரு பேரன்/ பேத்தி தனது வாழ்க்கை வரலாற்றுக் கதையை தனது பேரக்குழந்தைகளுக்குச் சொல்வதாக இருக்கலாம். எனவே வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் சில நிமிடங்கள் முதல் பல மணிநேரங்கள் வரை இருக்கலாம்.

வாய்மொழி வரலாறு: வடிவங்கள்
ஒலி மற்றும் ஒளி

வாய்மொழி வரலாற்றை ஒலி அல்லது ஒளி வடிவங்களில் பதிவு செய்யலாம். சேமிப்புத் திறன் (storage capacity), கோப்பின் அளவு (file size) பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். மேலும் முக்கியமாக, நீண்டகால ஆவணப்படுத்தலுக்காக பேணிப் பாதுகாப்பிற்கான திறன் கொண்ட கோப்பு வடிவத்தில் இருத்தல் அவசியம்.

எழுத்துரு:

எழுத்துரு வடிவம் என்றபோது, வாய்மொழி வரலாற்றை எழுத்துரு வடிவில் படியெடுத்தலாக (trascription) மாற்றலாம். இந்த படியெடுத்தல் ஒரு நூலகம் அல்லது ஆவணகத்தில் ஆவணங்களை கண்டுபிடிக்க உதவும் கருவிகளின் (finding aids) நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

நேர்காணப்பட்ட நபரே தனது தனிப்பட்ட நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதலாம், ஆனால் இது வாய்மொழி வரலாறு என்ற வகை அல்ல.
கையால் எழுதப்பட்ட தனிப்பட்ட நினைவுகள் வெவ்வேறு வழிகளில் ஆஆவணப்படுத்தலாம்


 • கையால் எழுதப்பட்ட தாழ்கள் இயற்பியல் (physical) களஞ்சியங்களில் ஒரு இயற்பியல் ஆவணமாக ஆவணப்படுத்தலாம்.
 • கையால் எழுதப்பட்ட தாழ்கள் மின் வருடப்பட்டு (scan) எண்ணிமமயமாக்கலாம் (digitalisation). எண்ணிமக் கோப்பை எண்ணிம களஞ்சியத்தில் ஆவணப்படுத்தலாம்.
 • கையால் எழுதப்பட்ட தாழ்கள் கணினி தட்டச்சு செய்யப்பட்டு கோப்புகளாக மாற்றலாம். அக்கோப்புகள் எண்ணிம களஞ்சியத்தில் ஆவணப்படுத்தலாம்.

மின் வருடப்பட்டு பின்னர் எண்ணிமமயமாக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கணினி தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகளை PDF / A கோப்பு வடிவமாக மாற்றம் செய்ய வேண்டும். இந்த வடிவம் பலவிதமான PDF வடிவங்களில் ஒன்று ஆகும். இது நீண்ட கால ஆவணப்படுத்தலிற்காக சர்வெதேசமாக தரப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும் (International standardised format). ஆனால் நம்பகத்தன்மை (authentication) மற்றும் உறுதிப்படுத்தல் (verification) காரணங்களிற்காக இயற்பியல் ஆவணங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது முக்கியம்.

வாய்வழி வரலாறு: எடுத்துக்காட்டுகள்

ROTA: Race On The Agenda – Through the Generations (Eelam Tamil Oral History, based in London)
Arbeiderminnene (The working memories)
British Library Oral History
Oral History in the Digital Age
Oral History Center
Over 600 oral histories of combat veterans
Vietnam War Era Veterans Oral Histories
Rosie the Riveter / World War II Home Front Oral History Project

வாய்மொழி வரலாறு: தனியுரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம்

நோர்வேயில் தனியுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் என்று வரும்போது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல்கள் உள்ளன.

தனியுரிமை

நோர்வே தனியுரிமைக் கொள்கையின்படி ஒரு நபரைப் பற்றிய எழுத்துரு, ஒலி மற்றும் ஒளி தனிப்பட்ட தகவல்களாகக் கருதப்படுகின்றன. எனவே, ஒப்புதல் படிவங்கள் முக்கியமானவை! நேர்காணல் செய்யப்படும் நபர் தன்னை நேர்காணல் செய்ய (ஒலி / ஒளி / எழுத்துரு) ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் விளைவாக ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவை ஒரு களஞ்சியத்தில் பேணிப் பாதுகாக்க முடியும். Memoar இரண்டு வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுகின்றது:

 1. ஒரு நேர்காணலை ஆராய்ச்சிப் பொருளாகப் பேணிப் பாதுகாக்க முடியும். அதாவது, ஒரு பதிவை ஆராய்ச்சிக்கு மட்டுமே அணுக முடியும்.
 2. ஒரு நேர்காணலை பொதுமக்களுக்கு பகிரங்கமாகக் கிடைக்கச் செய்யலாம்.

ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிடுவதன் மூலம் நேர்காணப்படும் நபர் அனுமதி வழங்க வேண்டும். ஒரு நேர்காணல் கோப்பு எவ்வாறு பேணிப் பாதுகாக்கப்படலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்பதை இந்த ஒப்புதல் படிவம் மூலம் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அந்த நபர் ஒரு நேர்காணலின் ஒலி/ ஒளிப் பதிவின் முதல் பகுதியில் தனது வாய்வழி ஒப்புதலை அளிக்க வேண்டும். நூலக நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு பதிவின் தொடக்கத்தில் வாய்மொழி ஒப்புதல் பெறும் நடைமுறை அவர்களும் பின்பற்றுகின்றனர்.

Memoar இன் ஒப்புதல் படிவம்:
www.memoar.no/avtale

பேச்சுச் சுதந்திரம்

பேச்சு சுதந்திரம் என்று வரும்போது, நேர்காணல் செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமான விடயங்களைப் பற்றி சுதந்திரமாக பேசலாம். ஆனால் கொடுக்கப்பட்ட கருப்பொருளிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும், Memoar இன் கூற்றுப்படி, நேர்காணலை வெளியிடுமாறு அவர்கள் கோர முடியாது. இந்த விடயத்தில், Memoar பத்திரிகை நெறிமுறையை (press ethics) பின்பற்றுகின்றது. இச்சந்தர்ப்பங்களில் அவர்கள் உள்ளடக்கத்திற்கான ஆசிரியர்களாக செயற்படுகிறார்கள். மூன்றாம் தரப்பினருக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் என்றால், Memoar உள்ளடக்கத்தை வெளியிடாது. உதாரணமாக, நேர்காணலில் குறிப்பிடப்படும் வேறு நபர்கள் தமது ஒப்புதலைத் தராவிட்டால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் வெளியிடாது. ஒரு நேர்காணல் கோப்பில் இவ்வாறான பகுதிகள் தணிக்கை செய்யப்படும். ஆனால் அப்பகுதிகள் அதல் அசல் கோப்பில் பேணிப் பாதுகாக்கப்பட்டு, ஆராய்ச்சிக்கு மட்டும் கிடைக்கச் செய்யப்படும். மீதமுள்ள நேர்காணல் பரவலான அணுக்கத்திற்கு விட்டாலும், தணிக்கை செய்யப்பட்ட பகுதிகள் பொதுமக்களுக்கு அணுகக் கிடைக்காது.

வாய்மொழி வரலாறு: ரிமை

Memoar கூற்றுப்படி, நேர்காணல் செய்யப்பட்ட நபரே அவரது நேர்காணல் பதிவுகளின் உரிமையாளர் என்பதை அவர்களின் கொள்கையாகக் கொண்டுள்ளனர். நேர்காணல் செய்பவர் முதன்மை உரிமையாளர் அல்ல, ஆனால் இரண்டாம் நிலை உரிமையாளர். புகைப்படக் கலைஞர் அல்லது ஒரு நிறுவனத்திற்கும் இதே படிநிலை உரிமை ஆகும். நேர்காணல் செய்யப்படும் நபர் எந்த நேரத்திலும் நேர்காணல் ஒரு களஞ்சியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது அதன் பகுதிகள் பின் திகதிகளில் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கோரலாம். நேர்காணப்பட்ட நபர்கள் எந்த நேரத்திலும் தங்கள் பங்களிப்பை ஒரு களஞ்சியத்தில் பேணிப் பாதுகாத்தலைத் திரும்பப் பெறலாம். இருப்பினும், Memoar நேர்காணப்படும் நபருடன் “பங்களிப்பைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை” நிறுத்தியுள்ளது. உதாரணமாக, பேரக்குழந்தைகள் அல்லது சந்ததியினர் தங்களது முன்னோரின் பதிவை நீக்கக் கோர முடியாது. நேர்காணப்பட்ட நபர் காலமானதும், நேர்காணலுக்கான நிர்வாகப் பொறுப்பும் ஒரு நிறுவனமாக Memoar இடம் செல்லும். இந்த வகையான விவரக்குறிப்புகள் அனைத்தும் நேர்காணப்படும் நபர் அவரின் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க வேண்டும்.

நேர்காணல் கோப்பு ஒரு வரலாற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதா அல்லது ஆராய்ச்சிப் பொருளாக மட்டும் பயன்படுத்தலாமா என்ற முடிவு எடுக்க வேண்டியது முக்கிய கூறு ஆகும்.

ஆவணப்படுத்தல் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இருந்தால், இன்னும் சில காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இதற்காக விரிவான தனியுரிமை ஒப்புதல் பணிகளைச் செய்ய வேண்டும். ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பதியப்பட்டு பேணிப் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் பற்றிய மேலதிகத் தகவலுக்கு:
https://www.etikkom.no/hvem-er-vi-og-hva-gjor-vi/Hvem- is-we / The-national-research-ethics-committee-for-social-sciences-and-humanities / 
மற்றும்
https://nsd.no/personvernombud/.

வாய்மொழி வரலாறு: தோற்றம்

ஒரு வாய்மொழி வரலாற்றுப் பதிவு ஒரு வரலாற்றின் புனரமைப்பு அல்லது மறு விளக்கக்காட்சிப் பதிவாகும். இருப்பினும், எதிர்காலத்தில் இதனைத் பதிவு செய்த நபர் அல்லது அமைப்பின் ஆவணமாகும். அந்தப் பதிவு ஒரு ஆவணமாக மாற, அதன் தோற்றம், நோக்கம் மற்றும் சூழல் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். Memoar கூற்றுப்படி, தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில், வாய்மொழி வரலாற்றுப் பதிவின் உரிமை நேர்காணப்பட்ட நபரிடமே இருக்கும். ஆனால் ஆவண முன்னோக்கின் அடிப்படையில், வாய்மொழி வரலாற்றுப் பதிவின் தோற்றம் அதனை உருவாக்கிய அமைப்பு அல்லது நபரிடமே இருக்கும். இது உரிமையைப் பற்றியது அல்ல, மாறாக தோற்றம் பற்றியது. உதாரணமாக, DsporA Tamil Archive ஒரு நபர் தனது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அல்லது நோர்வேயில் ஒரு தமிழ் அமைப்பின் தோற்ற வரலாற்றைச் சொல்லும் பதிவை உருவாக்கினால், அந்த வாய்மொழி வரலாற்றுப் பதிவின் தோற்றம் DsporA Tamil Archive ஆகும்.

வாய்மொழி வரலாறு: பேணிப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு

ஒலி மற்றும் ஒளி பங்களிப்புகளைப் பேணிப் பாதுகாக்க தற்போது minner.no ஐப் பயன்படுத்தும் பல பயனாளர்களில் Memoar ஒன்றாகும். இருப்பினும், ஒலி மற்றும் ஒளி வழி வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படும் பாரிய கேள்விகளாக உள்ளன. Memoar கூற்றுப்படி, தற்பேதைய சூழலில் இவ்வகையான தனியார் ஆவணங்கள் (private archive) நிரந்தரமாக சேமித்துப் பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவொரு களஞ்சியமும் பெற்றுக் கொள்வதில்லை. நோர்வேயிய தேசிய நூலகம் இச்செயற்பாட்டில் உள்ளது, ஆனால் அவை தனியார் ஆவணங்களை (private archive) பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தயாராகுவதற்கு இன்னும் சில படி முறைகள் மீதமுள்ளது. அவர்கள் அதற்குத் தயாரானதும் தனியார் ஆவணங்களும் (private archive) அவர்களின் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
மேலதிக விபரம்: www.abmdig.no

இடைப்பட்ட காலத்தில், Memoar ஒரு தற்காலிக தனியார் உள்ளக ஆவணகத்தை உருவாக்குகிறது.
மேலதிக விபரம்: www.memoar.no/infrastruktur

தவிர, அவர்கள் தமது ஒலி மற்றும் ஒளிப் பதிவுகளை தங்கள் செயற்திட்டமான “Muntlig historie for alle” (“அனைவரின் வாய்மொழி வரலாறு”/ “Oral history for everyone”) மூலம் minner.no க்கு வழங்குகிறார்கள். அங்கிருந்து அது “Norsk Folkeminnesamling” (நோர்வேயிய நாட்டுப்புற நினைவக சேகரிப்பு/ Norwegian Folk Memory Collection) இற்க்குச் செல்லும். எனினும் இது நிரந்தர தீர்வு அல்ல.

இதுவரை, Memoar தாமாகவே வாய்மொழிப் பதிவுக் கொப்புகளை உருவாக்கி, சேகரித்து வருகின்றது. அதோடு உள்ளூர் வரலாற்றுக் கழகங்கள் (historielagene) மற்றும் பிற செயற்திட்டக் குழுக்களிடமிருந்தும் அதனை சேகரிக்கின்றது.
ஆவணப்படுத்தலிற்கான நிரந்தரக் களஞ்சியம் உருவாகும் வரை இவ்வமைப்பு தமது சேகரிப்பை தங்களது Dropbox இல் சேமிக்கின்றது. Memoar தனது வலைத்தளத்திலும் வெளியிடுகின்றது.

நூலாக நிறுவனம் தனது வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை Creative Commons licence (கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்) இன் கீழ் aavanaham.org இல் அணுக்கத்திற்கு கிடைக்கச் செய்கின்றது.


Aavanaham.org

நூலக நிறுவனம் ஒரு தமிழ் எண்ணிம சமூக ஆவணகம் (களஞ்சியம்) ஆகும். இது “நூலக திட்டம்” எனும் பெயரில் இரண்டு தமிழ் தன்னார்வலர்களால் ஈழத்தில் (இலங்கை) 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இது விரைவில், கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு மனப்பாண்மை மக்களின் கூட்டுப் பங்களிப்பினால் நூலக நிறுவனமாக பரிணமித்தது. இது நன்கொடைகளால் நிர்வகிக்கப்படுகிறது. Aavanaham.org என்பது 2017 ஆம் ஆண்டு நூலக நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது. இது அனைத்து வகையான ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சேகரித்து, பிரிவுகள் மற்றும் குறியீடுகள் கொடுக்கப்பட்டு (categories and index), சேமித்து, பேணிப் பாதுகாத்து, பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

நூலாக நிறுவனம் ஒரு வாய்மொழி வரலாறு பகுதியை ஆவணகதில் (aavanaham.org) கொண்டுள்ளது. அது “வாய்மொழி வரலாற்று ஆராய்ச்சி நிலையம்” என்ற செயற்திட்டப் பெயரில் ஈழத்தில் வாழும் மக்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கி, சேகரித்து வருகின்றது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள ஏனைய தமிழர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளையும் சேகரித்து வருகின்றது. தமிழ் வாய்மொழி வரலாற்றை பதிவு செய்து, சேகரித்து சேமித்து, பேணிப் பாதுகாத்து, பொதுமக்கள் அணுக்கத்திற்கு கிடைக்கச் செய்த களஞ்சியங்களில் ஒன்று நூலக நிறுவனம் ஆகும். இதுவரை அறியப்பட்டதின் அடிப்படையில், ஈழத்தில் வாய்மொழி வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கும் முதல் களஞ்சியமாக நூலக நிறுவனம் அறியப்படுகின்றது.

Minner.no

Minner.no பல்வேறு வகையான நேர்காணல்கள் மற்றும் எழுதப்பட்ட முறையீடுகளை சேகரிக்க, பேணிப் பாதுகாக்க மற்றும் பரவலாக்க ஒரு எண்ணிமச் சூழலை உருவாக்குகின்றது. இங்கு பேணிப் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் பல்வேரு நபர்களின் அறிவையும் அனுபவங்களையும் எடுத்துரைகின்றது. Minner.no இன் கூற்றுப்படி, இக்கருவி வளர்ச்சியில் உள்ளது. மேலும் Minner.no சிறந்த ஏற்பாடுகளை எளிதாக்குவதற்கு நீண்ட கால முன்னோக்குடன் செயற்படுகின்றன:

 • தனிப்பட்ட நபர்கள் தங்களது சொந்த அனுபவங்களை கடத்தவும் – மற்றவர்களின் அனுபவங்களில் பங்கேற்கவும்
 • பண்பாட்டு நிறுவனங்கள் சமூகத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்து சேகரிக்க பொதுமக்களிற்கு அழைப்பு விடுக்கவும்
 • பல்வேறுபட்ட மக்கள் தங்களது சொந்த வாழ்க்கையையும் வாழ்க்கை நிலைமைகளையும் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்கவும்
Memoar – வாய்மொழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history)

Memoar என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது நோர்வேயில் வாய்மொழி வரலாற்றுக்கான வள மையத்தை உருவாக்குகின்றது. அவர்கள் ஏனைய நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சமகாலத்தைப் பற்றிய வாய்மொழிப் பதிவுகளை உருவாக்க, சேகரிக்க, பேணிப் பாதுகாக்க, மற்றும் பரவலாக்க செயற்படுகின்றது. அவர்களின் நோக்கமானது “å fremja ein kultur for å ta vare på og dela munnlege forteljiongar om levd liv” (“வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வாய்மொழி கதைகளைப் பேணிப் பாதுகாக்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டை ஊக்குவிப்பதாகும்” / “to promote a culture of preserving and sharing oral narratives about lived life”).

2020 ஆம் ஆண்டின் அன்றாட வாழ்க்கைகளை தற்போது Memoar ஆவணப்படுத்துகின்றது. இது கொரோனாவை மையமாகக் கொண்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு: http://www.memoar.no/korona.
தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் Zoom அல்லது பிற தொலைத்தொடர்வு தளங்கள் மூலம் நேர்காணல் செய்து உரையாடலைப் பதிவு செய்கிறார்கள்.

Memoar இன் ஒரு பரவலான அழைப்பு

DsporA Tamil Archive Memoar ஐத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தமது ஆர்வத்தைக் காட்டினர். ஆர்வமுள்ள தமிழ் நபர்கள், நிறுவனங்கள் அல்லது பிற சமூகங்களுக்கு கடந்த கால மற்றும் நிகழ்கால வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்து சேகரிப்பதற்கான செயல்முறைப் பயிற்சி வகுப்புகளை வழங்குவது குறித்த தகவலை ஒரு பரவலான அழைப்பாக விடுத்தனர். இன்நேரத்தில் Memoar “அனைவரின் வாய்மொழி வரலாறு” எனும் செயற்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறுகின்றது. இதனால் பங்கேற்பாளர்களுக்கு எந்த செலவும் இல்லை. ஆனால் பங்கேற்பாளர்கள் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதற்கான இட வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.


பின்முறிப்பு மற்றும் மேற்கோள்:

1அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை மற்றும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதுகலை தமிழ் ஆய்வுத் துறை இணைந்து “வரலாற்றியல் நோக்கில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்” எனும் தலைப்பில் நடாத்திய ஒரு வார பன்னாட்டுக் கருத்தரங்கம் . 08. ஆகஸ்ட் 2020 அன்று கருத்தரங்கின் 6 ஆம் நாள் அமர்வு “ரோமானியப் பேரரசு கால ஆவணங்கள் கூறும் சங்ககால வணிகச் செய்திகள்“என்ற தலைப்பில் நடாத்தப்பட்டது. இத்தலைப்பை க.சுபாஷினி வழங்கினார். அவர் பன்னாட்டு பண்பாட்டு ஆய்வறிஞர் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை, யேர்மனி இன் நிறுவனத் தலைவர் ஆவர்.

tamilchindhanaimarabu tvm. (2020). Home [YouTube channel]. Retrieved August 08, 2020, from https://m.youtube.com/watch?v=HyuQq81LYGU.

2 பண்டைய தமிழகம் என்பது சங்க காலம் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பிரதேசத்தைக் குறிக்கும். அது இன்றைய கேரளா உட்பட தமிழ் நாடு ஆகிய பிரதேசங்கள் ஆகும்.

3 ஒரு பதிவை எழுத்துரு, ஒலி, ஒளி அல்லது வேறு ஊடங்களில் பதிவு செய்வது ஆவணப்படுத்தலின் ஒரு படிமுறை ஆகும். ஒரு பதிவை உருவாக்கி அதனை சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடியவாறு ஒரு களஞ்சியத்தில் பேணிப் பாதுகாக்கும்போதே ஒரு ‘ஆவணப்படுத்தல்’ செயல்முறை முழுமை அடைகின்றது.


நன்றி:

நூலக நிறுவனம், ஈழம்
http://noolahamfoundation.org/

Minner.no, நோர்வே
https://minner.no/

Memoar – வாய்மொழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history), நோர்வே
http://www.memoar.no/


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 22.10.2020

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering)

English

உலகில் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி ஆகும். ஆனால் நோர்வேயிய பொது நூலகங்களில் இந்த பண்டைய மொழியின் பிரதிநிதித்துவம் கவலைக்குரிய நிலையில் உள்ளது.

நோர்வே தேசிய நூலகம் (Nasjonalbiblioteket – NB) ஒரு நோர்வேயிய அரச நிறுவனம் ஆகும். இது நோர்வேயில் வெளியிடப்படும் அனைத்து விதமான வெளியீடுகள்  மற்றும் தயாரிப்புகளை பேணிப் பாதுகாக்கும் பணியைக் கொண்டுள்ளது. இது நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் («pliktavlevering» – legal deposit) சட்டத்தின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடங்களில் வெளியாகும் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளை, «ஒப்படைப்புக் கடமை» எனும் செயற்பாட்டின் கீழ் கையாளுகின்றது. ஒப்படைப்புக் கடமை என்ற சொல் கடுமையாக தென்படலாம். ஆனால் நடைமுறையில் ஒரு வெளியீட்டை பேணிப் பாதுகாப்பதற்காக நோர்வே தேசிய நூலகத்திடம் கொடுப்பது அதனை தயாரித்து வேளியிட்டவரின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இது நூல்களை மட்டும் குறிக்காது! ஆனால், இது நூல்கள் முதல் வரைபடங்கள், திரைப்படங்கள், சுவரொட்டிகள், ஒளிபரப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் பல.

இவ்வாறு பேணிப் பாதுகாக்கப்படும் அனைத்து விதமான வெளியீடுகளும் தயாரிப்புகளும் சமகால மற்றும் எதிர்கால படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் முக்கியமான முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன. அதோடு இவ்வெளியீடுகள் பேணிப் பாதுகாத்து, அவற்றை பொதுத் தளங்களில் கிடைக்கச் செய்து, அணுக்கத்துக்கும் விடும் பொழுது ஒரு அடையாள அங்கீகாரம் உருவாகின்றது. தொட்டுணரக் கூடிய மற்றும் தொட்டுணர முடியாத (physical and virtual) வெளியீடுகள் ஒருவர் தனது இருப்பை இனம் கண்டு, தனது சொந்த மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி, பிரதிபலிக்க உதவும்.

முக்கியமாக, நோர்வேயிய ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் (pliktavlevering) அடிப்படையில், அனைத்து ஊடகங்களிலும் வெளியான நோர்வேயிய வெளியீடுகளும் தயாரிப்புகளும், நோர்வே தேசிய நூலகத்திற்கு (NB) ஒப்படைப்பிற்காக அனுப்பவேண்டிய கடமை (pliktavlevering) உள்ளது.

இங்கு அச்சிடப்பட்ட மற்றும் பிற ஊடகங்களில் பன்மொழி வெளியீடுகளைக் கையாளும் “பன்மொழி நூலகம்” நிறுவனத்தைப் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


உள்ளடக்கம்:
 • ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering): நோர்வேயிய வெளியீடுகள்
 • நூல்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட வெளியீடுகள்
  • ISBN:
  • அணுக்கம் மற்றும் கிடைக்கும் தன்மை
  • எண்ணிமமயமாக்கப்பட்ட எழுத்து வடிவிலான வெளியீடுகள்
  • வெளிநாட்டிலிருந்து நோர்வேத் தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புக்கான அணுக்கம்
 • பன்மொழி நூலகம் – The Multilingual Library
 • எண்ணிமப் பொருள்: மின்நூல்
 • எண்ணிமப் பொருள்: வலைத்தளம்
 • எண்ணிமப் பொருள்: சமூக ஊடகம்
 • பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகம்
 • நோர்வே தேசிய நூலகத்தின் பரவலான அழைப்பு

ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering): நோர்வேயிய வெளியீடுகள்

நோர்வே தேசிய நூலகத்தின் (NB) ஆணையானது (mandate) “அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் கிடைக்கச் செய்தல்» ஆகும். பாரம்பரியமாக, “வெளியிடப்பட்ட உள்ளடக்கம்” என்பது நூல்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற அச்சிடப்பட்ட பொருட்களாக இருந்தன. ஆனால் இன்று «வெளியிடப்பட்ட உள்ளடக்கம்» என்பது ஒலி, காணொளி, திரைப்படம் மற்றும் எண்ணிமப் பொருள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. இங்கு முக்கிய சொற்கூறு “வெளியிடப்பட்ட உள்ளடக்கம்”. இதுவே NB மற்றும் நோர்வேயில் உள்ள ஆவணகங்களின் ஆணையை (mandate) வேறுபடுத்துகிறது.
ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) பற்றிய மேலதிகத் தகவலுக்கு: www.pliktavlevering.no

நூல்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட வெளியீடுகள்

ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் அடிப்படையில் NB 7 நூல் பிரதிகள் வரை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு. அனுப்பி வைக்கப்படும் வெளியீடுகள், NB இல் பதிவு செய்யப்பட்டு Mo i Ranaவில் உள்ள அவர்களின் பாதுகாப்பு வைப்பகத்தில் (security magazine) பேணிப் பாதுகாக்கப்படும். அதோடு, ஒஸ்லோ மற்றும் depot நூலகத்தில் உள்ள பொது சேவைகளுக்கும் பிரதிகள் வழங்கப்படும்.
NB இன் பதிவுத் தரவுத் தளம்:
http://www.oria.no/
(இத்தளத்தில் «Nasjonalbiblioteket» என்பதைத் தெரிவு செய்யவும்)

ISBN

பல தமிழ் நூல்கள் மற்றும் பிற எழுத்து வடிவிலான வெளியீடுகள் ISBN இல்லாமல் உள்ளன. இந்த நிலையால் ISBN இன் செயல்பாட்டை அறிந்து கொள்ள நாம் NBயைத் தொடர்பு கொண்டிருந்தோம். ஒரு நூலில் ஒரு ISBNயை இணைப்பது கட்டாயமற்றது. ஒரு நூல் NB இன் சேகரிப்பில் சேர்க்கப்படுவதும் மற்றும் அவர்களால் அதை பொதுப் பாவனைக்குக் கிடைக்கச் செய்வதும் ISBN எனும் கூறு தீர்மானிப்பது அல்ல. எடுத்துக்காட்டாக நூல் விற்பனையாளர்களின் எண்ணிம அமைப்பில் (booksellers’ system), ஒரு நூலை அடையாளம் காணவும், தேடவும் ISBN பயனுள்ள ஓர் கருவி ஆகும். ஆனால் வெளியிடப்பட்ட நூல்ககளில் ISBN இருப்பது கட்டாயம் அல்ல. அது வெளியீட்டாளரின்  விருப்பத்தின் அடிப்படையில் இணைக்கலாம்.

ஒரு நோர்வேயிய வெளியீட்டாளர் (வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் சுய வெளியீட்டாளர்கள்) நோர்வேயின் தேசிய நூலகத்திலிருந்து ISBN எண்(களை) இலவசமாக முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம். நோர்வேயில் வெளியிடும் வெளியீடுகளுக்கு ISBN எண் NB ஆல் வழங்கப்படும்.

ISBN-13 with EAN 13 barcode on German language book. (wikipedia.org)

இருப்பினும், இரண்டு விடயங்கள் முக்கியமானவை:

 1. ஒரு நூல் பொதுப் பாவனைக்கு உட்படுத்த வேண்டும், அதாவது ஒரு தனிப்பட்ட வட்டத்தைத் தாண்டி பரவலாக்கப்பட வேண்டும். இது ஒரு குடும்பத்திற்கான முற்றிலும் தனிப்பட்ட வெளியீடாக இருக்க முடியாது (என்றாலும் சில காரணங்கள் இருந்தால், NB சில நேரங்களில் இங்கு விதிவிலக்குகள் செய்யும்)
 2. ஒரு நூல் நோர்வேயில் வெளியிடப்பட வேண்டும்.
அணுக்கம் மற்றும் கிடைக்கும் தன்மை

NB ஒரு வெளியீட்டைப் பெற்றுக் கொண்டதும், கூடிய விரைவில் தேசிய நூலகத்தின் தரவுத்தளங்களில் பதிவு செய்யப்படும். NB பெற்றுக் கொள்ளும் நூல்களை அவர்களின் சேகரிப்பில் சேர்க்கும்போது, அவை பொதுமக்களுக்குக் கிடைக்கும். முதல் நகல் எதிர்காலத்திற்காக பேணிப் பாதுகாத்தலுக்கு கொடுக்கப்படும். இரண்டாம் நகல் ஒஸ்லோவில் உள்ள NB இல் உள்ள வாசிப்பு (reading room) அறையில் கிடைக்கச் செய்யப்படும். மூன்றாவது நகல், நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு இடையில் பரிமாறப்பட்டு, வாசகர்களுக்கு இரவலாக கிடைக்கும். அதோடு, துறும்ஸ், துரண்யம், பேர்கன் மற்றும் ஒஸ்லோவில் உள்ள பல்கலைக்கழக நூலகங்கள் மற்றும் சாமி நாடாளுமன்ற நூலகங்களுக்கு (Tromsø, Trondheim, Bergen and Oslo and the Sami Parliament’s libraries) பிரதிகள் அனுப்பப்படும். ஆனால் அனைத்து வகையான நூல்களும் அவற்றின் சேகரிப்பில் சேர்க்கப்படுவது இல்லை.  உதாரணமாக சிறுவர் நூல்கள்.

NB நோர்வேயிய பொது நூலகங்களான, Deichman நூலகங்கள் (ஒசுலோ) மற்றும் Folkebibliotek (நாடளாவிய பொது நூலகங்கள்), ஆகிவற்றிற்கான நூல் கொள்வனவு செய்வது இல்லை. தமிழ் நூல்கள் ஒசுலோ மற்ரும் நாடளாவிய பொது நூலகங்களில் கிடைக்கச் செய்ய நோர்வேயிய பன்மொழி நூலகம் நிறுவனத்தை («Det flerspråklige biblioteket») தொடர்பு கொண்டு உங்கள் நூலை அவர்களுக்கு பரிந்துரையுங்கள்.

எண்ணிமமயமாக்கப்பட்ட எழுத்து வடிவிலான வெளியீடுகள்

NB சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நூல்களும் இறுதியில் எண்ணிமமயமாக்கப்படும். நோர்வேயிய மொழி அல்லாத வேற்று மொழி வெளியீடுகளும் எண்ணிமமயமாக்கப்படும். எண்ணிமமயமாக்கப்பட்ட வெளியீடுகள் www.nb.no எனும் இணையத்தளத்தில் தேடி இனம் காணலாம்.

ஆனால் பதிப்புரிமை காரணமாக சில எண்ணிமமயமாக்கப்பட்டக் கோப்புகள் ஒசுலோவில் உள்ள NBஇன் வாசிப்பு அறையில் அதனைப் பயன்படுத்தலாம். ஏனைய கோப்புகளிற்கான அணுக்கம் உங்கள் வீட்டுக் கணினியில் பெறலாம். மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பொது நூலகங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகம் உள்ளது.
எண்ணிம அணுக்கம் பற்றி மேலதிக தகவலுக்கு:
https://www.nb.no/hjelp-og-informasjon/rettigheter/

வெளிநாட்டிலிருந்து நோர்வேத் தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புக்கான அணுக்கம்

வெளிநாட்டிலிருந்து தேசிய நூலகத்தின் எண்ணிமச் சேகரிப்புகளை அணுக விண்ணப்பிக்க முடியும், ஆனால் ஒரு சிறப்பு ஆராய்ச்சி அல்லது ஆவணத் தேவை இருத்தல் வேண்டும். மேலதிகத் தகவல்: https://www.nb.no/hjelp-og-informasjon/bruk-av-bokhylla-i-utlandet/

பன்மொழி நூலகம் – The Multilingual Library

பன்மொழி நூலகம் என்பது நோர்வே தேசிய நூலகத்தால் வழங்கப்படும் ஒரு சேவையாகும். பன்மொழி மற்றும் பன்முக கலாச்சார மக்களுக்கான நூலக சேவைகளை பொது நூலகங்கள் வழங்குவதற்கான ஆதரவை வழங்குவது இன்நிறுவனத்தின் செயற்பாடு ஆகும்.
இவர்கள் இலக்கியம் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான பன்மொழி வெளியீடுகளை கையாளுகின்றன. மேலதிகத் தகவலுக்கு:
நோர்வேயியம்: https://dfb.nb.no/
ஆங்கிலம்: https://dfb.nb.no/multilingual-library

எண்ணிமப் பொருள்: மின்நூல்

மின் நூல்களை இங்கே பதிவேற்றம் செய்ய வேண்டும்:
https://www.nb.no/pliktavlevering/digital-avlevering/

இருப்பினும், தற்போது NB ibook / kindle / mobi போன்ற கோப்பு வடிவங்களை பேணிப் பாதுகாக்கும் உத்தரவாதத்தை அளிக்கவில்லை. ஏனெனில் NB அதைப்  பேணிப் பாதுகாக்கும் ஒரு அமைப்பைக் (system) கொண்டிருக்கவில்லை. எனவே, முடிந்தால், PDF அல்லது EPUB இல் ஒரு பதிப்பை உருவாக்குமாறு NB அறிவுறுத்துகிறது. இதனால் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறான நிலையில், ஒரு மின்நூல் வெளியீட்டை சமர்ப்பிக்கும் பொழுது, அதன் அசல் வடிவம் ibook / kindle / mobi அல்லது வேறு கோப்பு வடிவம் என்பதைக் குறிப்பிடும் கடிதத்தை இணைத்து அனுப்பவும்.

எண்ணிமப் பொருள்: வலைத்தளம்

இணையத்தில் பொதுப்பாவனையில் கிடைக்கும் நோர்வேயிய பொருட்களை NB சேகரிக்கின்றது. இணையத்தில் நோர்வேயிய எண்ணிமப் பொருள் பின்வருமாறு:

 • நோர்வேயிய இணையக் களத்திலிருந்து (.no) உருவாகும் எண்ணிம பொருட்கள்
 • நோர்வேயிய நிலைமைகளைத் தழுவிய விடயங்கள் அல்லது நோர்வேயிய வெளியீட்டாளரைக் கொண்ட பிற இணையக் களங்களிலிருந்து உருவாகும் எண்ணிம பொருட்கள்.

NB பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வலைத்தளம் உங்களிடம் இருந்தால், வலைத்தளத்திற்கான இணைப்பை nettarkivet@nb.no க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அதை நீங்கள் பரிந்துரைக்கலாம்.
மேலதிகத் தகவலுக்கு:
https://www.nb.no/samlingen/nettarkivet/

எண்ணிம பொருள் தேசிய நூலகத்தின் எண்ணிம பாதுகாப்பு வைப்பகத்தில் சேமிக்கப்படும் (digital security magazine). மேலும் இது ஒஸ்லோவில் உள்ள Solli Plassல் உள்ள NB இன் வாசிப்பு அறையில் (reading room) பொதுமக்களுக்கு கிடைக்கும். காலப் போக்கில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்கள் மற்றும் பிற பொது நூலகங்களிலிருந்தும் இப்பொட்களை பயன்படுத்தலாம். இது எண்ணிம பயன்பாட்டு உரிமங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு இருக்கும்.

எண்ணிமப் பொருள்: சமூக ஊடகம்

சமூக ஊடகங்கள் Online archive’s harvesting of websites இல் சேர்க்கப்படுவது இல்லை. சமூக ஊடகங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று “இணைய சேவைகளின் உள்ளடக்கத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் பயனாளர்கள் இடையே வேறுபாடின்றி இருத்தல்”. ஆசிரியர் பொறுப்பை இனம் காண்பது; தனியார்அறிக்கைகள் (private statements) எவை என்று இனம் காண்பது; அதோடு அவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதைப் பகுத்தறிவது கடினம். இது தனியுரிமைக் கொள்கைக்குள் (privacy policy/ personvern) உட்பட்டது. பல சமூக ஊடகங்கள் தானியங்கி முறைகள் மூலம் அவற்றை Online archive’s harvesting செய்ய அனுமதிக்காது என்று அவர்களே வெளிப்படையாகக் கூறுகின்றன. எனவே வெளிநாட்டுச் சேவைகளான முகநூல் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்தலில் சட்டப்பூர்வ சிக்கல்கள் உள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகம்

பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளி ஊடகங்கள் Mo i Rana வில் உள்ள தேசிய நூலகத்தின் பாதுகாப்பு வைப்பகத்தில் (security magazine) பேணிப் பாதுகாக்கப்படும். இரண்டாவது நகல் ஒஸ்லோவில் உள்ள தேசிய நூலகத்தில் பார்வையாளர்களின் பாவனை நகலாக வைக்கப்படும். இது பயனாளர்களிடம் இரவலுக்கு வழங்கப்படுவது இல்லை. ஆனால் தனித்தனியே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கேட்டல் அறைகளில் அதனை கேட்கலாம் மற்றும் பார்க்கலாம். இவ்வாறு வழங்கப்பட்ட ஒலிப் பதிவுகள் ஆவணப் பணிகள், ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

நோர்வே தேசிய நூலகத்தின் பரவலான அழைப்பு

DsporA Tamil Archive நோர்வே தேசிய நூலகத்தைத் தொடர்பு கொண்டபோது, ஒப்படைப்புக் கடமைப் பிரிவின் (pliktavlevering) ஆலோசகர் தமிழில் பல வெளியீடுகள் தம்மிடம் இல்லை என்பதைக் கூறினார். தமிழ் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்வதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். முன்னர் குறிப்பிட்டபடி, நோர்வேயில் வெளியிடப்பட்ட நூல்களில் ISBN இருக்கிறதா இல்லையா என்பது முக்கியம் அல்ல. ஆனால் அவை பரவலான வெளியீடாக இருத்தல் வேண்டும். அவ்வாறான வெளியீடுகள் NB தனது சேகரிப்பு, பேணிப் பாதுகாத்தல் மற்றும் அணுக்கத்துக்குப் பெற விரும்புகின்றதைத் தெரிவித்தார்.

ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் அடிப்படையில் (pliktavlevering), நோர்வேயில் வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளும் நோர்வே தேசிய நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். NB ஒரு ISBN யை ஒரு வெளியீட்டாளருக்கு வழங்கும் போது, அவர்கள் இத்தகவலை அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் (வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் சுய வெளியீட்டாளர்கள்) கூறுவார்கள். எனவே, ISBN இல்லாமல் வெளியிடும் அனைவருக்கும் இந்த ஒப்படைப்புக் கடமைச் சட்டத்தின் தகவல் கிடைத்திருக்கும் என்பது உறுதி அல்ல. இதனால் நோர்வேயின் தேசிய நூலகத்தின் சேகரிப்பில் பல வெளியீடுகள் இல்லாமல் உள்ளது.

இவ்வாறான வெளியீடுகளை பேணிப் பாதுகாப்பதில் NB தமது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஒப்படைப்புக் கடமை (pliktavlevering) பற்றிய தகவல்களை பரப்பி உதவுமாறும் DsporA Tamil Archive வைக் கோரியது.
அனைத்து நோர்வேயிய-தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை தமது வெளியீடுகளையும் தயாரிப்புகளையும், பேணிப் பாதுகாக்கவும் மற்றும் அணுக்கத்துக்கு விடவும், NB க்கு அனுப்பி வைப்பதை DsporA Tamil Archive ஊக்குவிக்கின்றது.


நன்றி:
நோர்வேயியத் தேசிய நூலகம் – The National Library of Norway


உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்டது: 22.10.2020

பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தைப் பார்வையிட்ட தமிழ் அமைப்பு

27. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

பேர்கன் நகர ஆவணகம்

ogarkitekter.no

அனைவருக்கும் வணக்கம்,

பேர்கனில் உள்ள ஒர் தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தை வெள்ளிக்கிழமை, 26 யூன் 2020, அன்று அங்கு சென்று பார்வையிட்டுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அவர்கள் ஆவணக்காப்பிற்கான ஒர் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
அங்கு சென்ற அமைப்பின் பிரதிநிதியை ஒரு ஆவணக்காப்பகர் வரவேற்றுக் கொண்டார். அந்த ஆவணக்காப்பகர் ஆவணக்காப்பகத்திற்குள் ஒரு சுற்றுப்பயணத்தையும், ஆவணக்காப்பக பணி தொடர்பாக தகவல் மற்றும் கலந்துரையாடலையும் வழங்கினார்.
அந்த தமிழ் அமைப்பு பேர்கன் நகர ஆவணக்காப்பகத்தில் தமது சில ஆவணப் பொருட்களை மிக விரைவில் பாதுகாத்து பொது அணுகலுக்கு வழங்க முடிவு செய்யும் என்று நம்புகிறேன்.
ஆவணக்காப்பகப் பொருட்களைப் பாதுகாக்க அந்த அமைப்பு முடிவு செய்தவுடன் ஆவணத்தின் விபரங்களைத் தருகின்றேன்.

பல தமிழர்கள் டிஜிட்டல் அணுகலில் கவனம் செலுத்துவதை நான் அறிவேன். அனூடாக உலகளாவிய தமிழர்கள் ஆவணக்காப்பகப் பொருட்களை இணைய வழியில் அணுகலாம் என்பதற்காக. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணப் பொருட்கள் அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ஆவணப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான தீர்வைக் காண நாங்கள் உரையாடலில் இருக்கின்றோம்.

நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை தமிழர்கள் தமது நேரத்தை ஒதுக்கி, நோர்வேயில் உள்ள ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்தைப் பார்வையிட ஓர் வாய்ப்பை அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
தமிழர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை (historical and cultural heritage) நீங்களே வைத்திருக்கிறீர்கள். அவை எதிர்கால தமிழ் தலைமுறையினருக்கு அவசியமான மற்றும் மதிப்புமிக்க சொத்துக்கள். இந்த ஆவணப் பொருட்கள் நோர்வேயிய ஆவணப் பாரம்பரியத்தினும் (documentation heritage) ஒர் பங்கு வகிக்கின்றதை மறந்துவிடாதீர்கள்.

மீண்டும் எமது முதலாம் தலைமுறை புலம்பெயர் தமிழருக்கு நன்றிகள் 🙏🏽

பேர்கன் நகர ஆவணக்காப்பகம்:
https://www.bergen.kommune.no/omkommunen/avdelinger/bergen-byarkiv

என்றும் அன்புடன்,
கு. பகீரதி

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.