English ஏப்ரல் 2020 "நோர்வேக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களால் எவ்வாறு நோர்வேயில் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி அடைந்தது" என்ற கருப்பொருளில் ஓர் நூல் திட்டத்தை பகீரதி குமரேந்திரன் 2017ம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். இது நோர்வேயில் உள்ள தமிழர்களின் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த அவரால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆகும். இது DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. இத்திட்டம் தொடர்பாக நோர்வேயிய தேசிய நூலகத்தின் நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனத்துடன் (The Norwegian Institute [...]