அன்புள்ள டிஸ்போரா தமிழ் ஆவணகம்

English

சஞ்சயன் செல்வமாணிக்கம் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களை மேற்கொள்வதற்கான நேர்காணல் வழிகாட்டி ஒன்றை உருவாக்குவதற்கான உதவியை DsporA Tamil Archive இடம் 08. யூலை 2020 கோரினார். அவர் நோர்வே நாட்டில் நூலக நிறுவனத்திற்காக செயற்படும் ஒரு தன்னார்வலர். அவர் “நோர்வேயில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கை” எனும் கருப்பொருளில் நோர்வே-தமிழர்களின் வாய்மொழி வரலாற்றை ஒலி/ ஒளி வடிவில் பதிவு செய்ய விரும்புகின்றான். அப்பதிவுகளை aavanaham.org இல் பேணிப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார்.

DsporA Tamil Archive இன் ஆரம்பகர்த்தா ஓர் உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களை நேர்காணல் செய்து வருகின்றார். இன்நூல் திட்டம் DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் DsporA Tamil Archive பெற்றுக்கொண்ட கோரிக்கையின் கருப்பொருளான, “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை”, அடிப்படையில் அந்த உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நேர்காணல் வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது. இந்த வழிகாட்டி நோர்வே சூழலுக்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த வழிகாட்டியில் உள்ள கேள்விகள் பிற புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அந்தந்தப் புலம்பெயர் நாடுகளின் சூழலுக்கு ஏற்றவாறு கேள்விகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும்.
PDFWord

வாய்மொழி வரலாறு மற்றும் அதன் செயல்முறை பற்றிய மேலதிக தகவல்.


வசீகரன் சிவலிங்கம் DsporA Tamil Archiveயைத் தொடர்பு கொண்டு சமூகத்தில் நிலவும் ஒரு பொதுவான தேவையை பகிர்ந்து கொண்டார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறைச் சேர்ந்த தமிழர் ஆகிய இவர் ஒரு கவிஞர் மற்றும் Vaseeharan Creations Sivalingam மற்றும் நோர்வே தமிழ் திரைப்பட விழா (Norway Tamil Film Festival) ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஆவார்.
நோர்வே வாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள் போலவே, பல நூல்களையும் பிற எழுத்து வடிவிலான வெளியீடுகளையும் தமிழிலும், பிற மொழிகளிலும் தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நோர்வேயிய நூலகங்களில் தமிழ் நூல்களின் பாரிய பற்றாக்குறை உள்ளது. நாம் நோர்வேயிய-தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை மட்டும் சேகரித்து வழங்கினாலேயே, பொது நூலகங்களில் உள்ள தமிழ் பிரிவு நிரப்பப்பட்டுவிடும்.

நோர்வே தேசிய நூலகம்: ஒப்படைப்புக் கடமை (Pliktavlevering) மற்றும் அதன் செயல்முறை பற்றி மேலதிக தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s