தமிழருடைய ஆவணச் சேகரிப்புகள்

English

ஆவணச் சேகரிப்பு

ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பு ஆவணப் பொருட்களைச் சேகரிக்க முடியும். இந்த ஆவணப் பொருட்கள் பலதரப்பட்ட இயக்கு சக்திகளால் (நபர்கள் / அமைப்புகள் / ஏனைய) உருவாக்கப்பட்டிருக்கும். அவை பல்வேறு வகையான ஊடகங்களில் (எழுத்துரு / ஒலி / ஒளி / கலைப்பொருட்கள்) இருக்கலாம். இந்தச் சேகரிப்பில் பொதுவாக பலதரப்பட்ட ஆவண உருவாக்குனர்கள் உருவாக்கிய தனித்தனிப் பொருட்கள் உள்ளடங்கியிருக்கும். சேகரிப்பு ஒன்று அல்லது பல தலைப்புகள் அல்லது ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது தனியார் ஆவண வகையின் ஒரு கிளை. இந்த வகையான ஆவணம் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தின் உள்ளக கையாள்கையில் இருக்கும். அதனால் அவை மட்டுப்படுத்தப்பட்ட அல்லது பொது அணுக்கம் இல்லாத ஆவணமாக இருக்கலாம்.

இது பல்வேறு வகையான தமிழ் தனியார் ஆவணச் சேகரிப்புகளைப் பட்டியலிடும் ஓர் முயற்சி. நீங்கள் அறிந்தவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆவணகம் │ நூலகம் │ அருங்காட்சியகம் பக்கத்தைப் பார்வையிட அழுத்துங்கள்.
தனியார் ஆவணம் பக்கத்தைப் பார்வையிட அழுத்துங்கள்.


இலங்கைத் தமிழ்ச் சங்கம்.
1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம்.
18.12.1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத்தில் “Fact book” எனும் இணையப் பக்கமாக இவ்வமைப்பின் எண்ணிம ஆவணச் சேகரிப்பு (organisational archive) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆவணப் பிரிவில் பல்வேறு நபர்கள் எழுதிய கட்டுரைகள், மற்றும் பல்வேறு தளங்களில் வெளியான ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா.
www.sangam.org
@IlankaiTamilSangam

Archive Project.
2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். வரலாற்றில் பதிவுகள் இல்லாதபோது புதிய படைப்பு முறைகளைப் பயன்படுத்தி கடந்த காலத்தை ஆவணப்படுத்துதல். ஆவணப் பரப்புதலுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கனடா.
https://tamilarchive.ca/project/about
@tamilarchive

ஆவணகம் (Avanagam)
ஜேர்மனி வாழ் தமிழரான அன்ரன் ஜோசப் 1988 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தமிழ் ஆவணப் பொருட்களை சேகரித்து வருகிறார். “ஆவணகம்” என்ற பெயரில் 1997 ஆம் ஆண்டு முதல் ஆவணக் கண்காட்சியை நடாத்தி வருகின்றார். பல்வேறு நாடுகளில் ஆவணக் கண்காட்சியை நடாத்திய பின்னர், 13 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு முனிச்சில் 50 வது ஆவணக் கண்காட்சியை நடாத்தினார்.
யேர்மனி.
50 வது ஆவணக் வலையொளி: ஆவணக் கண்காட்சி.

Race on the Agenda (ROTA).
யனவரி 2012 இல், லண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாய்மொழி வரலாறுகளை சேகரிக்க Race on the Agenda (ROTA) இற்கு Heritage Lottery Fund நிதியத்தால் நிதி உதவி வழங்கப்பட்டது. முதன்மையாக ஹவுன்ஸ்லோ அல்லது அதனைச் சுற்றி உள்ள இடத்தில் வசிப்பவர்கள் மற்றும் மேற்கு லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரின் நினைவுகளில் இருக்கும் வரலாறு மற்றும் அனுபவங்கள் பதிவு செய்தனர்.
ஐக்கிய இராச்சியம்.
https://tamilgenerations.rota.org.uk/

Tharavu – தரவு
இரண்டு தமிழ் தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு எண்ணிம ஆவணச் சேகரிப்பு இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் 13.07.2019 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்தளத்தில் 1983 முதல் ஈழத் தமிழ் வரலாறு சார்ந்த நூல்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
நோர்வே.
https://tharavu.no/

சரவணன் கோமதி நடராசா
இவர் நோர்வே வாழ் தமிழ் எழுத்தாளர். தனது ஆய்வு மற்றும் எழுத்துப் பயணத்தில் பெற்ற நூல்கள், காகித ஆவணங்கள் சேகரித்து வைத்திருக்கின்றார். அவர் பழைய புகைப்படங்களை மெருகூட்வதோடு, ஒரு எழுத்தாளராக தனது பயணத்தில் பெற்ற எண்ணிம எழுத்துரு ஆவணங்களையும் சேகரித்து வருகின்றார்.
நோர்வே.
முகநூல்
https://www.namathumalayagam.com/


புதுப்பிக்கப்பட்டது: 12.10.2020

Let’s build Tamil cultural and historical heritage together.